‘மலேசியாவில் ஓமிக்ரான் பரவலுக்கு அதிக வாய்ப்புள்ளது’

கோலா­லம்­பூர்: மற்ற நாடு­க­ளைப் போல் மலே­சி­யா­வி­லும் ஓமிக்­ரான் கிரு­மிப் பர­வல் பெரு­ம­ள­வில் ஏற்­படு­வ­தற்­கான வாய்ப்பு அதி­கம் உள்­ள­து என்று மலே­சிய சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தின் கூறி­யி­ருக்­கி­றார்.

டெல்­டா­வை­விட ஓமிக்­ரா­னால் ஏற்­படும் பாதிப்பு குறை­வாக உள்­ளது என்­றா­லும் அது வேக­மா­கப் பர­வக் கூடி­யது என்­பதை நாம் கவ­னத்­தில் கொள்­ள­வேண்­டும் என்று அவர் சொன்­னார்.

வேக­மா­க­வும் அதி­க­மா­க­வும் பர­வும்­போது ஓமிக்­ரான் கிரு­மி­யால் மருத்­து­வ­ம­னை­களும் அதன் தீவிர சிகிச்சை பிரி­வு­களும் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளால் நிச்­ச­யம் நிரம்பி வழி­யக்­கூ­டும்.

"மருத்­து­வ­ம­னை­கள் திண­றக்­கூ­டிய நிலையை சுகா­தார அமைச்சு தவிர்க்க விரும்­பு­கிறது. எனவே ஓமிக்­ரான் பர­வலை மட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான வியூ­கத்­தைப் பின்­பற்­ற­வேண்­டும்," என்று கைரி ஜமா­லு­தின் தனது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

விரி­வு­ப­டுத்­தப்­பட்ட கூடு­தல் தடுப்­பூசி திட்­டம், முகக்­க­வ­சம் அணி­வது, நல்ல காற்­றோட்­டம், தொடர்பு தட­ம­றி­தல் செயலி போன்­றவை ஓமிக்­ரான் கிரு­மிப் பர­வலை மட்­டுப்­ப­டுத்த உத­வும் என்­றும் அவர் சொன்­னார்.

பரி­சோ­த­னை­யில் தொற்று உறுதி செய்­யப்­ப­டு­வோர் விகி­தம் 0.99ஆக உள்­ள­தாக சுகா­தா­ரத் துறை தலைமை இயக்­கு­நர் நூர் ஹி‌ஷாம் அப்­துல்லா கூறி­ய­தற்­குப் பதி­ல­ளிக்­கும் வித­மாக அவர் இவ்­வாறு கூறி­யி­ருந்­தார். முந்­திய நாள் இது 0.98 விகி­த­மாக இருந்­தது.

டிசம்­பர் 26ஆம் தேதி முதல் தொற்று உறுதி செய்­யப்­ப­டு­வோர் விகி­தம் மெல்ல அதி­க­ரித்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

டிசம்­பர் 31ஆம் தேதி நில­வ­ரப்­படி மலே­சி­யா­வில் 64 ஓமிக்­ரான் சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டன. அவற்­றில் 63 வெளி­நாட்­டில் இருந்து சென்­ற­வர்­க­ளோடு தொடர்­பு­டை­யவை. ஒரு சம்பவம் உள்ளூர் தொற்றாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மலே­சி­யா­வில் பதி­வான ஓமிக்­ரான் சம்­ப­வங்­களில் 78 விழுக்­காட்­டி­னர் உம்ரா புனித யாத்­திரை சென்று திரும்­பி­ய­வர்­கள் என்று தர­வு­கள் காட்­டு­வதை அவர் சுட்­டி­னார்.

இதன் அடிப்­ப­டை­யி­லேயே, உம்ரா பய­ணம் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக அவர் சொன்­னார். வரும் 8ஆம் தேதி முதல் உம்ரா பய­ணம் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­படும் என்று நேற்று முன்­தி­னம் அறி­விக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே, மூன்று முதல் 11 வயது பிள்­ளை­க­ளுக்கு அடுத்த மாதம் முதல் தடுப்­பூசி போட சுகா­தார அமைச்சு திட்­ட­மிட்டு வரு­வ­தாக சர­வாக் மாநி­லத்­தின் துணை முதல்­வ­ராகப் பொறுப்­பேற்க உள்ள சிம் குய் ஹியன் சொன்­னார்.

சர­வாக்­கில் இன்று முதல் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டு­கின்­றன. எனவே, மாண­வர்­கள் விரை­வில் பள்­ளி­க்குத் திரும்­பு­வார்­கள் என்­ப­தால் தடுப்­பூசி அவ­சி­யம் என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!