மலேசியாவில் மீண்டும் வெள்ளம்; 12,000 பேர் வெளியேற்றம்

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் வட மாநி­லங்­களில் பெய்து வரும் கன­மழை­யால் ஏற்­பட்­டுள்ள வெள்­ளத்­தைத் தொடர்ந்து, ஏறத்­தாழ 12,000 பேர் தங்­கள் வசிப்­பி­டங்­க­ளை­விட்டு வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

கிளாந்­தான், தெரங்­கா­னு­வில் அமைக்­கப்­பட்­டுள்ள வெள்ள நிவா­ரண மையங்­களில் அவர்­கள் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

தேசிய பேரி­டர் மேலாண்மை அமைப்பு வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை வெளி­யேற்­றும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­தாக பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாகோப் தெரி­வித்­தார்.

கிளாந்­தா­னில் 14 வழித்­த­டங்­களில் அனைத்­துப் போக்­கு­வ­ரத்­து­களும் நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

வட மாநி­லங்­களில் மோச­மான வானிலை தொட­ரும் என்­றும் நாட்­டின் பெரும்­ப­கு­தி­கள், போர்­னியோ தீவின் சில பகு­தி­களில் கன­மழை பெய்­யும் என்­றும் வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

குறிப்­பாக, மலாக்கா நீரி­ணை­யின் வடக்கு முனை­யில் பலத்த காற்று வீசும் என்­றும் கடல் சீற்­றத்­து­டன் காணப்­படும் என்­றும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஏற்கெனவே, சென்ற டிசம்­பர், ஜன­வரி மாதங்­களில் பெய்த கன­மழை, மலே­சியா அண்­மைய ஆண்­டு­களில் சந்­தித்­தி­ராத மோச­மான வெள்­ளத்­திற்கு வழி­வ­குத்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!