ஹாங்காங்கில் கொவிட்-19 மரணங்கள் அதிகரிப்பு; நிரம்பிவழியும் சவக்கிடங்கு

ஹாங்காங்: ஹாங்காங்கில் கொவிட்-19 மரணங்கள் அதிகரித்து வருவதால் சவக்கிடங்குகள் நிரம்பி வழிகின்றன.

இதனால் நடமாடும் குளிர் சாதனப் பெட்டிகள் ஏற்பாடு செய்யப் பட்டு உடல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாக ஹாங் காங்கில் தொற்றுச் சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன. ஏறக்குறைய தொற்று தொடங்கிய ஆரம்பகால நெருக் கடியை ஹாங்காங் காட்சிகள் நினைவூட்டுகின்றன.

ஃபூ ஷான் பொது சவக் கிடங்குக்கு அருகில் நான்கு நடமாடும் குளிர்சாதனப் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை புகைப்படங்கள் மூலம் காண முடி கிறது. அதன் அருகில் காலியான சவப்பெட்டிகளும் ஐஸ் மூட்டைகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

அண்மைய கிருமிப் பரவலால் ஹாங்காங்கின் சுகாதாரத் துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கொவிட்-19 மரண விகிதம் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. தடுப்பூசி போடாதவர்களிடையே மரணம் அதி கரித்துள்ளது. உடல் ஊனமுற்றோர் நிலையங்கள் உட்பட 750க்கும் மேற்பட்ட பராமரிப்பு நிலையங்களில் தொற்று பரவியிருப்பதால் அர சாங்கம் கவலை அடைந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் குளி ரூட்டப்பட்ட கொள்கலன்கள் உட்பட 300 சடலங்களை வைப்பதற்கான இடங்கள் உருவாக்கப்பட்டு வரு கின்றன. ஃபூ ஷான் சவக்கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஒரு பிரிவு ஏப்ரலில் தயாராகும்போது ேமலும் 800 சடலங்கள் பாதுகாப் பதற்கான இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!