ஹாங்காங்கில் உலகிலேயே அதிக உயிரிழப்பு விகிதம்

ஹாங்­காங்: உல­கி­லேயே ஆக அதிக கொவிட்-19 உயி­ரி­ழப்பு விகி­தம் கொண்ட நாடாக உள்­ளது ஹாங்­காங்.

அங்கு தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத மூத்­தோ­ரி­டைய உயி­ரி­ழப்பு அதி­க­ரித்­துள்­ளது. இந்­நி­லை­யில், அங்கு தாதிமை இல்­லங்­களில் கிரு­மிப் பர­வல் மேலும் அதி­க­ரித்து வரு­வ­தால், உயி­ரி­ழப்பு மேலும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

ஞாயிற்­றுக்­கி­ழமை நில­வ­ரப்­படி, மாண்­டோர் எண்­ணிக்கை கடைசி ‌ஏழு நாளில் சரா­ச­ரி­யாக ஒரு மில்­லி­யன் மக்­க­ளுக்கு 27 பேராக உயர்ந்­தது.

ஜான்ஸ் ஹாப்­கின்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத் தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் ப்ளூம்­பெர்க் கணக்­கீடு இதைக் கூறு­கிறது.

இது அமெ­ரிக்­கா­வுக்கு அடுத்து உல­கி­லேயே இரண்­டா­வது ஆக அதிக உயி­ரி­ழப்பு பதி­வான லாட்­வி­யா­வை­விட இரட்­டிப்­பா­கும்.

இதற்­கி­டையே, வீட்­டி­லேயே தொற்­றுப் பரி­சோ­தனை செய்து கொள்­ளும் திட்­டத்­தின்­கீழ், கிட்­டத்­தட்ட 17,000 பேர் தொற்று இருப்­பதை உறுதி செய்­துள்­ள­தாக அர­சாங்­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன. இது­த­விர சுகா­தார அதி­கா­ரி­கள் நேற்று மேலும் 28,745 புதிய தொற்­றுச் சம்­ப­வங்­களை உறுதி செய்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், நாடு தழு­விய தொற்று பரி­சோ­தனை ஏப்­ரல் மாதத்­திற்கு ஒத்தி வைக்­கப்­ப­டக்­கூ­டும் எனக் கூறப்­ப­டு­கிறது.

உலகளவில் கிருமித்தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை ஆறு மில்லியனைக் கடந்துவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!