கிருமித்தொற்றால் சிரமப்படும் சீனா

கிருமித்தொற்றால் சிரமப்படும் சீனா

1 mins read
bc293bba-6c0e-4921-a1cc-a3f58c7641d7
ஷங்ஹாயில் கொவிட்-19 பரிசோதனைகளைமேற்கொள்ளும் அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ் -

ஷங்­ஹாய்: சீனா­வில் புதி­தாக 1,500க்கும் அதி­க­மான புதிய கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­பவங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. 2020ஆம் ஆண்டு கொவிட்-19 பர­வல் தொடங்­கி­ய­ பிறகு சீனா­வில் ஒரு நாளில் இத்­தனை கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­னது இதுவே முதல்­முறை.

எனினும், கிருமித்தொற்றுக்கு ஆளான ஆறு பேர் மட்டுமே மோசமாக நோய்வாய்ப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஓராண்டுக்கும் மேலாக சீனாவில் கிருமித்தொற்றுக்கு ஆளான யாரும் மரணமடையவில்லை.

ஓமிக்­ரான் வகை கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் சீனா பாதிக்­கப்­பட்­டுள்­ளது. நாட்­டின் பல்­வேறு நக­ரங்­களில் கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.

சீனாவின் தொழில்நுட்ப மையமான ஷென்சன் நகரில் குடியிருப்பாளர்கள் விட்டிலிருந்து வேலை பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அந்நகரில் அத்தியாவசியச் சேவைகளை வழங்காத இடங்கள் மூடப்பட்டன. ஷென்­ச­னில் உண­வ­கங்­களில் உணவு உட்­கொள்­வது தடை­செய்­யப்­பட்­டுள்­ளது. மதுக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளதாக சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான ஊடகங்கள் தெரிவித்தன.

நக­ரின் 10ல் ஐந்து வட்­டா­ரங்­களில் பல­ருக்கு தின­மும் கொவிட்-19 பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­படுகின்றன. இந்­ந­ட­வ­டிக்கை நான்கு நாள்­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­படும்.

ஹாங்­காங்­கிற்கு அருகே அமைந்­துள்ள ஷென்­ச­னின் மக்­கள்­தொகை சுமார் 18 மில்­லியன். அந்­ந­க­ரின் அலு­வ­ல­கக் கட்­ட­டங்­கள், குடி­யி­ருப்பு வளா­கங்­கள் ஆகி­ய­வற்­றில் முடக்­க­நிலை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.