சீனாவின் ஷென்ஸென் நகரம் முடங்கியது

பெய்­ஜிங்: சீனா­வில் கிரு­மித்­தொற்று நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டே வரும் வேளை­யில், அதன் முக்­கிய தொழில்­நுட்ப நக­ர­மான ‌‌‌ஷென்­ஸென் முழு­வ­தும் முடக்­கப்­பட்­டது.

அந்­ந­க­ரத்­தில் சனிக்­கி­ழ­மை­யன்று 66 தொற்­றுச் சம்­ப­வங்­கள் உறுதி செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து, அந்­ந­க­ரத்­தின் 17 மில்­லி­யன் மக்­கள் வீட்­டி­லேயே முடங்­கிக்­கி­டக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. பொது போக்­கு­வ­ரத்­தும் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த முடக்க உத்­த­ரவு இம்­மா­தம் 20ஆம் தேதி வரை நீடிக்­கும்.

இந்­ந­கர மக்­கள் அனை­வ­ருக்­கும் மூன்று முறை கிரு­மித்­தொற்று பரி­சோ­தனை செய்­ய­வும் சீனா திட்­ட­மிட்­டுள்­ளது.

சீனா­வில் நேற்று 1,437 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின. உயி­ரி­ழப்பு இல்லை.

ஓரிரு நாள்களுக்கு முன்னர், அங்கு ஒரே நாளில் 3,400 தொற் றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன. இது சீனாவில் ஈராண்டு காணாத உச்சமாகும்.

அத்­து­டன், ‌ஷாங்­காய் நகர மக்­கள் அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பய­ணங்­க­ளைத் தவிர்க்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. அங்கு பள்­ளி­களும் மூடப்­பட்­டன.

சுற்­று­லாத் தளங்­க­ளுக்­குச் செல்­லும் பார்­வை­யா­ளர்­கள் கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

சீனா­வின் குவாங்­டாங் மாநி­லத்­தில் உள்ள டோங்­கு­வான் நக­ரத்­தில் பேருந்­து­கள், சுரங்­கப்­பாதை பய­ணங்­கள் முழு­மை­யாக நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

இதற்­கி­டையே, சீனா­வின் ஆக உய­ர­மா­ன­தும் உல­க­ள­வில் இரண்­டா­வது உய­ர­மான கட்­ட­ட­மு­மான ‌ஷாங்­காய் கோபு­ரம் நேற்று காலை மூடப்­பட்­டது.

அங்­குள்ள ஊழி­யர்­களும் பார்­வை­யா­ளர்­களும் கிரு­மித்தொற்று இல்லை என்று உறுதி செய்­யப்­படும் வரை, வெளியே செல்­லத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!