நேட்டோவில் சேர ஃபின்லாந்தின் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு

ஹெல்சின்கி: நேட்டோ கூட்­ட­ணி­யில் ஃபின்லாந்தை சேர்த்­துக்­கொள்­வதன் தொடர்­பில் உட­ன­டி­யா­கச் செயல்­பட அமெ­ரிக்க செனட்­டர்­கள் உறு­தி­ய­ளித்­துள்­ள­னர்.

உக்­ரேன்­மீது ரஷ்யா படை­யெடுத்­துள்ள நிலை­யில், நேட்­டோ­வில் சேர ஃபின்லாந்து விருப்­பம் தெரி­வித்­துள்­ள­தைத் தொடர்ந்து, அமெ­ரிக்கா அதற்கு தனது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­ உள்­ளது.

உடன்­பா­டு­க­ளுக்கு ஒப்­பு­தல் அளிக்­கும் செனட் சபை, நேட்­டோ­வில் புதிய உறுப்பு நாடு­கள் சேர அனு­ம­திக்க வேண்­டும்.

செனட் வெளி­யு­ற­வுக் குழு­வுக்­குத் தலைமை தாங்­கும் செனட்­டர் பாப் மெனெண்­டெஸ், ஃபின்லாந்தோ சுவீ­டனோ நேட்­டோ­வில் சேர விண்­ணப்­பித்­தால், அதைக் கருத்­தில்­கொள்ள குழு ஏற்­கெ­னவே செயல்­பட்டு வரு­வ­தா­கக் கூறி­னார்.

ஃபின்லாந்­தின் இந்த முடிவை வர­வேற்­றுள்ள ஜெர்­மனி, அந்­நாடு நேட்­டோ­வில் சேர்­வ­தற்கு தனது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

பிரான்ஸ் தரப்­பி­லும் இதே­போன்ற ஆத­ர­வுக்­கு­ரல் எழுந்­து உள்­ளது.

இந்த விவ­கா­ரம் குறித்து கருத்­து­ரைத்த நேட்டோ தலை­வர் ஜென்ஸ் ஸ்டோல்­டென்­பர்க், நேட்­டோ­வில் உறுப்பு நாடாக சேர்­வ­தற்­கான நடை­முறை சுமூ­க­மா­க­வும் துரி­த­மா­ன­தா­க­வும் இருக்­கும் என உறு­தி­ய­ளித்­தார்.

நேட்­டோ­வில் ஃபின்லாந்து சேர்­வது தொடர்­பில் நாளை முறைப்­படி அறிக்கை வெளி­யி­டப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

“ஃபின்லாந்து எடுத்­துள்ள இந்த முடிவை நேட்டோ முழு­மை­யாக மதிக்­கிறது. நேட்­டோ­வில் சேர ஃபின்லாந்து விண்­ணப்­பிக்க முடி­வெ­டுத்­தால், நேட்­டோ­வுக்­குள் அது வர­வேற்­கப்­படும்,” என்று ஸ்டோல்­டென்­பர்க் கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!