அணுவாயுதம் தொடர்பான ஆவணங்கள்: டிரம்ப் இல்லத்தில் சோதனை

முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் இல்லத்தில் அணுவாயுதங்கள் தொடர்பான ஆவணங்கள் உள்ளனவா என்பதை அறிய அந்நாட்டின் மத்திய புலனாய்வு துறை வியாழக்கிழமையன்று (11 ஆகஸ்ட்) சோதனை நடத்தியுள்ளது.

இதைத் தெரிவித்த வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம், டோனல்ட் டிரம்ப்பின் பாம் பீச் கடற்கரையிலுள்ள 'மாரா லாகோ' உல்லாசத் தளத்தில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டனவா என்பதைத் தெரிவிக்கவில்லை.

இந்த சோதனையை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று டிரம்ப்பின் குடியரசுக் கட்சி வர்ணித்ததைத் தொடர்ந்து மத்திய புலனாய்வுத் துறை நடத்திய சோதனைக்கு நீதிபதி பிறப்பித்த உத்தரவை வெளியிடுமாறு அமெரிக்க நீதித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்க நீதித்துறையின் இந்த வேண்டுகோளினால் அந்நாட்டு பொதுமக்கள் சோதனையில் என்ன மாதிரியான ஆவணங்களை புலனாய்வுத் துறை குறிவைத்துத் தேடியது என தெரிந்துகொள்ளமுடியும் என ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறியது.

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஒருவரின் வீடு சோதனையிடப்பட்டது இதுவே முதல்முறை.

இந்தச் சோதனை, முன்னாள் அதிபர் டிரம்ப் 2021ஆம் ஆண்டு தான் வெள்ளை மாளிகையைவிட்டுச் செல்லும்போது சட்டத்துக்கு புறம்பாக, நீதித்துறை ரகசியமானவை என்று வகைப்படுத்திய சில ஆவணங்களை அப்புறப்படுத்தினரா என்ற விசாரணை தொடர்பானது என்று நீதித்துறை கூறுகிறது.

இந்தச் சோதனைக்கு தானே முன்வந்து அனுமதி வழங்கியதாக அமெரிக்காவின் தலைமைச் சட்ட அதிகாரி மெரிக் கார்லேண்ட் விளக்கம் அளித்துள்ளார்.

அத்துடன், திரு டிரம்ப்பின் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பொருள்களின் குறிப்பு ஒன்றைப் பற்றிய தகவல்களைப் பொதுமக்களுக்கு வெளியிடப்போவதாகவும் நீதித்துறை கூறியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!