நீதிமன்றத்தில் முன்னிலையாக இம்ரான் கானுக்கு உத்தரவு

இஸ்­லா­மா­பாத்: பாகிஸ்­தா­னின் முன்­னாள் பிர­த­மர் இம்­ரான் கானை வரும் 31ஆம் தேதி புதன்­கி­ழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி இஸ்­லா­மா­பாத் உயர்­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இம்ரான் கான் நீதி­மன்­றத்தை அவமதிக்­கும் கருத்­து­களை வெளி­யிட்­டாரா என்று மூன்று நீதி­ப­தி­கள் கொண்ட குழு நேற்று பரிசீலித்தது. நேரடியாக வந்து விளக்­கம் அளிக்­கும்படி நீதிபதிகள் உத்­த­ர­விட்­டனர்.

இவ்­வே­ளை­யில் இம்­ரான் கான் மீது நட­வ­டிக்கை எடுப்பது பற்றி சட்ட ஆலோ­ச­னை­யைக் கேட்­டி­ருப்­ப­தாக பாகிஸ்­தான் அர­சாங்­கம் கூறி­யது.

இம்­ரான் கான் அர­சாங்க அதி­கா­ரி­களை மிரட்­டி­ய­தா­கக் கூறி, அவர்­மீது நேற்று முன்­தி­னம் பயங்­க­ர­வாத எதிர்ப்­புச் சட்­டத்­தின்­கீழ் வழக்கு தொடுக்­கப்­பட்­டது.

தெஹ்­ரீக்-இ-இன்­சாப் கட்­சித் தலை­வ­ரான இம்­ரான் கான், இஸ்­லா­மா­பாத்­தில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற பொதுக்­கூட்­டத்­தில் உரை­யாற்­றி­னார். அப்­போது தமது உத­வி­யா­ளர் கைது­செய்­யப்­பட்­ட­தன் தொடர்­பில் காவல்­துறை, நீதிபதி ஆகி­யோர்­மீது வழக்கு தொடுக்­கப் போவ­தாக அவர் கூறி இருந்­தார்.

இம்­ரான் கான் ஏப்­ர­லில் நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னத்­தில் பதவி இழந்­ததை அடுத்து, பாகிஸ்­தா­னில் அர­சி­யல் குழப்­பம் நில­வு­கிறது.

புதிதாக தேர்­தலை நடத்­தும்படி அவர் அர­சாங்­கத்தை நெருக்கி வரு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!