‘பேய்விழா கூட்டம் சரியாகக் கையாளப்படவில்லை’

சோல்: தென்­கொ­ரி­யத் தலை­ந­கர் சோலில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற 'ஹாலோ­வீன்' எனப்­படும் பேய்­விழா கொண்­டாட்­டம் ஒன்றில் திரண்ட கூட்­டத்­தைக் கையாள அங்­கி­ருந்த அதி­கா­ரி­கள் போது­மான நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்று அந்­நாட்­டின் காவல்­துறைத் தலை­வர் கூறி­யுள்­ளார். ஆபத்து நேரக்­கூ­டிய அள­வில் கூட்­டம் திரண்­ட­தாக பல­முறை எச்­ச­ரிக்கை வந்தபோ­தும் இந்­நிலை உரு­வா­ன­தென அவர் குறிப்­பிட்டார்.

தென்­கொ­ரி­யா­வின் தேசிய காவல்­துறை அமைப்­பின் தலை­வரான யூன் ஹீ-கியு­ன் நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் இதைத் தெரி­வித்­தார்.

தென்­கொ­ரி­யா­வின் அவ­சர அழைப்பு எண் 112. சோலின் இட்­டே­வொன் பகு­தி­யில் நிலைமை அபா­யக் கட்­டத்தை நெருங்­கு­வதாக அதி­கா­ரி­களை எச்­ச­ரிக்க அந்த எண்­ணுக்­குப் பல அழைப்­பு­கள் வந்­த­தாக திரு யூன் கூறி­னார்.இட்­டேவொ­னின் குறு­கிய சாலை­களில் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் திரண்­டனர்.

இந்தத் துய­ரச் சம்­ப­வத்­தில் குறைந்­தது 156 பேர் மாண்­ட­னர். தென்­கொ­ரி­யா­வில் பொது­மக்­கள் நசுக்­கப்­பட்ட நிகழ்வு ஒன்­றில் இத்­தனை பேர் உயி­ரி­ழந்­தது இதுவே முதல்­முறை.

சம்­ப­வம் குறித்து முழு விசா­ரணை மேற்­கொள்­ளப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

"இந்த விவ­கா­ரத்­தில் உண்­மையை அறிந்து பொறுப்­பேற்­க­வேண்­டி­ய­வர்­களை அடை­யா­ளம் காண எல்லா இடங்­க­ளி­லும் நாங்­கள் உட­ன­டி­யாக கடு­மை­யான, தீவிர சோத­ன­க­ளை­யும் விசா­ர­ணை­க­ளை­யும் மேற்­கொள்­வோம்," என்று திரு யூன் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே, கூடு­த­லான காவல்­து­றை­யி­ன­ரை­யும் தீய­ணைப்பு அதி­கா­ரி­க­ளை­யும் பணி­யில் ஈடு­படுத்­தி­யி­ருந்­தா­லும் இச்­சம்­ப­வத்­தைத் தடுத்­தி­ருக்­க­மு­டி­யாது என்று சொன்ன தென்­கொ­ரிய உள்­துறை அமைச்­சர் லீ சாங்-மின் மன்­னிப்­புக் கேட்­டுக்­கொண்­டுள்­ளார். அவர் கூறி­யது பொது­ம­க்க­ளி­டையே கோபத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

தாம் கூறி­ய­தற்கு வருத்­தப்­படுவதா­க நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் திரு லீ சொன்­னார். சம்­ப­வத்­திற்­கான காரணத்தை அறி­யும் முயற்­சி­யில் தாம் ஈடு­ப­டப்­போ­வ­தா­க­வும் அவர் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!