அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்

செயற்கை நுண்­ண­றிவு பற்­றிய பேச்சு, தொழில்­நுட்­பம் அறிந்­த­வர்­களுக்கு மட்­டுமே என்ற மனப்­போக்கை மாற்றி தமிழ் பேசும் அனை­வ­ரும் ஈடு­படும் தலைப்­பாக இருக்க வேண்­டும் என்­பது மா.கணேஷ்­கு­மா­ரின் விருப்­பம்.

ஏஐ சிங்­கப்­பூர் அமைப்­பின் ‘அனை­வருக்­கு­மான செயற்கை நுண்­ணறிவு’ என்ற காணொளி கடந்த மா­தம் சிங்­கப்­பூ­ரின் நான்கு அதி­கா­ரத்­துவ மொழி­களில் வெளி­யி­டப்­பட்­டது. அவற்­றில் ஒன்­றான தமிழ்­மொ­ழி­யின் தொகுப்­பா­ள­ராக இந்த இளை­யர் இடம்­பெற்­றார்.

“செயற்கை நுண்­ண­றிவு மூலம் சமூ­கத்­தில் அனை­வ­ரும் பய­ன­டைய வேண்­டும்,” என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக தமிழ்­மொழி மன்­றத்­தின் முன்­னாள் தலை­வ­ரான இவர் கூறி­னார்.

மேற்­கூ­றப்­பட்ட காணொ­ளி­யைத் தயா­ரிக்க ஏஐ சிங்­கப்­பூர் கணேசை அணு­கி­யது. “செயற்கை நுண்­ண­றிவு தொடர்­பான சில தமிழ்ச் சொற்­கள் எனக்­குத் தெரி­யும். மொழி­பெ­யர்ப்பு அனு­ப­வம் கொண்ட சர்­மிலி செல்­வ­ராஜி எனக்கு இதில் பேரு­தவி­யாக இருந்­தார். காணொ­ளி­யில் உள்ள வாச­கங்­க­ளைப் புனைந்­தது அவர்­தான்,” என்று கணேஷ், 28, சொன்­னார்.

துறை சார்ந்த சொற்­க­ளைத் தமி­ழில் மொழி­பெ­யர்ப்­பது இத்­திட்­டத்­தில் இருந்த சவால் என்று நரம்­பி­யல் துறை­யில் முதுகலைப் பட்­டம் பயி­லும் சர்­மிலி செல்­வ­ராஜி, 25, தெரி­வித்­தார். செயற்கை நுண்­ண­றிவு, தக­வல் தொகுப்பு பகுப்­பாய்வு போன்ற பல சொற்­க­ளைத் தமி­ழில் மொழி­பெ­யர்த்­தது எனக்­கும் பல புதிய சொற்­க­ளைக் கண்­ட­றிய வழி­வ­குத்­தது.

“இணை­யத்­தின் உதவி, வளர்­தமிழ் இயக்­கத்­தின் இணை­யப்­ பக்கத்­தி­லுள்ள சொல்­வ­ளக் கையேடு, தமிழ் சொல்­லாற்­றல் அதி­கம் உள்­ள­வர்­கள் சில­ரைக் கேட்டு அறிந்­து­கொள்­ளு­தல் என பன்­முனை முயற்­சி­யின் பலனே இந்த மொழி­பெ­யர்ப்பு முயற்சி,” என்­கிறார் குமாரி சர்மிலி.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நரம்­பி­யல் மற்­றும் செயற்கை நுண்­ண­றி­வுத் துறை­யில் தற்­போது முனை­வர் பட்­டம் பயி­லும் கணேஷ்­கு­மார், உயிர் அறி­வி­யல் துறை­யில் இள­நி­லைப் பட்­டக் கல்­வியை மேற்­கொண்­டார். அதில் இவ­ருக்­குத் தக­வல் தொழில்­நுட்­பம் கற்­றுத் தரப்­ப­ட­வில்லை. இருந்­த­போ­தும், பல்­க­லைக்­க­ழக கல்­வி­மான் திட்­டம் மற்­றும் அறி­வி­யல் சிறப்­புத் திட்­டத்­தில் சேர்ந்து மற்ற துறை­களில் நிர­லி­டு­தல், மனோ­வி­யல், மானு­ட­வி­யல் உள்­ளிட்ட பாடங்­க­ளைப் பயின்­றார். இவற்­றைப் பயின்­ற­தால் 2017ல் ஏ*ஸ்டார் அமைப்பு புதி­தாகத் தொடங்­கிய செயற்கை நுண்­ண­றி­வுத் திட்­டத்­தில் ஆய்வு பொறி­யா­ள­ரா­கச் சேர முடிந்­த­தாக கணேஷ் கூறி­னார்.

இள­நி­லைப் பட்­டக் கல்­வி­யில் மூளை­யின் சமிக்­ஞை­க­ளைக் கண்­ட­றி­யும் உணர்­க­ருவி வாயி­லாக நாற்­காலி போன்ற பொருட்­களை அசைய வைக்­கும் நிரல்­களை உரு­வாக்­கிய இவ­ரது ஆய்­வுக் கட்­டு­ரை­யைப் பல்­க­லைக்­க­ழ­கம் பதிப்­பித்­தது. 2018ல் முனை­வர் பட்­டப்­படிப்­பைத் தொடங்­கிய கணேஷ், உயி­ரி­ய­லை­யும் நிர­லி­டு­த­லை­யும் இணைக்­கும் பல்­வேறு திட்­டங்­களில் ஈடு­பட்­டார்.

மனி­தர்­கள் மட்­டு­மின்றி விலங்­கு­களும் எப்­படி கற்­கின்­றன என்­பதை ஆராய்ந்து அதன் அடிப்­ப­டை­யில் நிரல்­களை உரு­வாக்­கும் திட்­டப்­ப­ணி­களில் இவர் ஈடு­பட்­டார். இவை­யெல்­லாம் கடி­ன­மாக உள்­ளதே என பலர் கூறி­னா­லும் நிர­லி­டு­த­லைக் காணொளி விளை­யாட்­டு­போல இவர் கரு­து­கி­றார்.

‘பைத்­தன்’ என்ற நிர­லி­டு­தல் மொழி­யில் கற்க ஈராண்­டு­கள் ஆன­தாக தெரி­வித்த கணேஷ், இதை மிக குறு­கிய காலத்­திற்­குள் சொந்­த­மாக கற்க வேண்­டி­யி­ருந்­தது,” என்­றார்.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘ஏஐ சிங்­கப்­பூர்’ அமைப்­பில் சேர்ந்த கணேஷ், மாண­வர்­க­ளுக்­கான செயற்கை நுண்­ண­றிவு திட்­டங்­க­ளைத் தொடங்­கி­னார். இவற்­றுக்­காக ‘இயற்கை மொழி கணினி முறை­யாக்­கம்’ என்ற தொழில்­நுட்­பம் மூலம் தமிழ் வாக்­கி­யங்­க­ளால் ஆன கதை­களை உரு­வாக்­கு­வது, படங்­கள் மற்­றும் உணர்ச்­சி­க­ளைக் கண்­டு­பி­டிப்­பது போன்­ற­வற்­றைச் செய்­யும் செயற்கை நுண்­ண­றிவு தொழில்­நுட்­பத்தை இவர் உரு­வாக்­கி­னார். மேலும், இசை செயற்கை நுண்­ண­றிவு தொழில்­நுட்­பத்­தில் இவ­ரும் இவ­ரது குழு­வி­ன­ரும் கர்­நா­டக இசையை ஒருங்­கி­ணைத்­த­னர்.

தமிழ் உள்­ளிட்ட தாய்­மொ­ழி­கள் மக்­க­ளின் உணர்­வு­கள் மீது தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதே இந்­தக் காணொ­ளி­யைத் தொகுக்க கார­ணம். இத­னைப் பெற்­றோர் பார்த்து தங்­க­ளது பிள்­ளை­க­ளைக் கற்­ற­லில் ஈடு­ப­டுத்த வேண்­டும் என்­பது கணே­ஷின் விருப்­பம். அத்­து­டன், வாழ்க்­கைத் தொழிலை மாற்ற விரும்­பு­வோ­ரும் காணொ­ளி­யைக் கண்டு பய­ன­டை­ய­லாம்.

‘செயற்கை நுண்­ண­றிவா மனி­தரா?’ என்ற போட்டி மனப்­பான்­மை­யைக் கைவிட்டு இரு­த­ரப்­பும் முன்­னேற்­றத்தை நோக்­கிச் செயல்­ப­ட­லாம் என்று கூறிய கணேஷ், இயந்­தி­ரங்­களை நாம் அன்­றா­டம் பயன்­ப­டுத்­து­வது போல வருங்­கா­லத்­தில் மக்­கள் சக­ஜ­மாக செயற்கை நுண்­ண­றி­வைப் பயன்­படுத்­து­வது தமது விருப்­பம் என்­கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon