அவதூறு வழக்கு: நடிகர் சூர்யா உட்பட 8 பேருக்கு பிடியாணை

நீலகிரி: செய்தியாளர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப் பட்ட வழக்கில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உட்பட தமிழ்த் திரை யுலகைச் சேர்ந்த எட்டு பேருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணையைப் பிறப்பித்துள்ளது நீதிமன்றம். இதையடுத்து தமிழ்த் திரையுலகில் பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு நடிகை புவனேஸ்வரியை விபசார வழக்கில் போலிசார் கைது செய்தனர். இது தொடர்பாக பிரபல தமிழ் நாளேடு செய்தி வெளி யிட்டது. அதில் திரையுலகத்தினர் குறித்து மோசமாக எழுதப்பட்டு இருப்பதாகக் கண்டனம் எழுந்தது. இதையடுத்து நடந்த கண்டன கூட்டத்தில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், விவேக், சரத்குமார், விஜயகுமார், அருண் விஜய், இயக்குநர் சேரன், நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Loading...
Load next