சுடச் சுடச் செய்திகள்

கைபேசியில் பேசுவதற்காக மரத்தில் ஏறிய இந்திய அமைச்சர்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது பிகானர் தொகுதிக்குச் சென்ற இந்திய நிதித் துறை இணை அமைச்சர் அர்ஜூன் மேக்வால், கைபேசி ‘சிக்னல்’ கிடைக்காததால் மரத்தின் மீது ஏறி நின்று பேசினார். உள்ளூர் மருத்துவமனையில் போதிய தாதியர்கள் இல்லை என்று தொகுதி மக்கள் புகார் கொடுத்ததை அடுத்து அதுகுறித்து விசாரிக்க வந்த அமைச்சர் அர்ஜுன் மேக்வாலிடம், சுத்தமான குடிநீர் இல்லாதது போன்ற தாங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல் களையும் முன்வைத்தனர். தனது தொகுதி மக்களிடம் குறைகளைக் கேட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால், குறைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்த அரசு அதிகாரிகளை கைபேசியில் தொடர்புகொள்ள முயன்றார்.

ஆனால் தொலைபேசித் தொடர்பு கிடைக்கவில்லை. கைபேசியில் தொடர்பு கிடைக் காமல் திணறிய அமைச்ச ருக்கு மரத்தின் மீது ஏறிப் பேசுமாறு பொதுமக்கள் வழி சொன்னார்கள். “எப்போதுமே கைபேசியில் எங்களுக்கு சிக்னல் கிடைப்ப தில்லை. அதனால், இருக்கும் மரங்களின் மீது ஏறிதான் கைபேசி யில் பேசுவோம்,” என்று அமைச் சரிடம் விளக்கிய அவர் கள், அவரையும் அவ்வாறு பேசு மாறு ஆலோசனை வழங்கினர். மக்கள் கூறிய யோசனையை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் சற்று நேரம் திகைத்த அர்ஜுன் மேக்வால், மரத்தின் மீது ஏறவும் முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை.

கைபேசிக்கு ‘சிக்னல்’ கிடைக்கா ததால் ஏணியில் ஏறி நின்று கைபேசியில் பேசும் மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வான். படம்: இந்திய ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon