சுடச் சுடச் செய்திகள்

ஆபத்தான ‘அம்பு’ விளையாட்டு

பெய்ஜிங்: சீனாவில் கூர்மையான ஆணி களையும் கூர்மையான பல் குச்சிகளையும் பாய்ச்சக்கூடிய கையடக்க அம்பு விளையாட்டு மிகப் பிரபலமாகி வருகிறது. ஆனால் இந்த கையடக்க அம்பு விளையாட்டு மூலம் குழந்தைகள் பார்வை இழப்பதற்கு முன்பே தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விளையாட்டுக் கருவி குழந்தைகளின் கண்களில் பாய்ந்து அல்லது உடலின் மற்ற பாகங்களில் குத்தி ஆபத்தான விளைவு களை ஏற்படுத்தக் கூடும் என்று பெற்றோர் அச்சம் தெரிவித்துள் ளனர். மிகவும் மலி வாக ஏழு யுவானுக்கு (S$1.42) இணையத் திலும் கடைகளிலும் இந்த விளையாட்டுக் கருவி விற்கப்படு கிறது. பல்குச்சிகள் பயன்படுத்தப்படும் இந்த அம்பு விளை யாட்டுக் கருவியில் கூர்மையான ஊசி களைப் பயன்படுத் தினால் விளையாட்டு விபரீதமாகிவிடும் என்று ஊடகங்களும் எச்சரித்துள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon