உ.பி.யில் மேலும் ஒரு ரயில் விபத்து

லக்னோ: உத்தரப்பிரதேச மாநி லத்தின் கான்பூர் அருகே கைஃபி யாட் எக்ஸ்பிரஸ் ரயில் விபத் துக்குள்ளானது. உத்தரப்பிரதேச மாநிலம் அசம் கரில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட கைஃபியாட் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் அலிகார் அருகே ஆரையா மாவட்டத்தின் அச் ஹல்டா பகுதியில் தடம்புரண்டது. இந்த விபத்தில் ரயில் எந்திரத்துடன் சேர்த்து 9 பெட்டி கள் தடம் புரண்டன. இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் காய மடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாகத் தெரிய வில்லை. அடுத்த தடத்தில் சென்று கொண்டிருந்த மண் ஏற்றி வந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டதே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

டெல்லியிலிருந்து ஒரு மருத்து வக்குழுவும் மீட்புக் குழுவும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டது. அக் குழுவினர் விபத்துப் பகுதியில் மாட்டிக்கொண்ட பயணிகளைப் பத்திரமாக மீட்டு டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசா பர் நகர் அருகே உத்கல் எக்ஸ் பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத் துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் பலியாயினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மீண்டும் ஒரு ரயில் விபத்து அதே மாநிலத்தில் நடந்துள்ளது குறிப் பிடத்தக்கது. இந்நிலையில் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, உ.பி.யில் நடந்துள்ள தொடர்ச்சியான ரயில் விபத்துகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலக முன்வந்துள்ளார். அவர் இதுகுறித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

தடம்புரண்ட கைஃபியாட் எக்ஸ்பிரஸ். படம்: ஊடகம்