வெள்ளை மாளிகை: அதிபர் டிரம்ப்பின் கருத்து இனவாதக் கருத்தல்ல

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய ஃபுட்பால் லீக் (என்எஃப் எல்) ஆட்டத்துக்கு முன்பு அமெரிக்க தேசிய கீதம் ஒளிபரப் பப்படும்போது முட்டிபோட்டு உட்கார்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் ஆட்டக்காரர்களை அதிபர் டோனல்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் கொடியையும் தேசிய கீதத்தையும் அவர்கள் அவமதிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். அவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பவர் களை அவர் வசைமொழி பயன் படுத்தி திட்டியது மட்டுமல்லாது, அவர்களைக் குழுவிலிருந்து வெளியேற்றவேண்டும் என்றும் கடந்த வெள்ளிக்கிழமையன்று அலபாமாவில் நடைபெற்ற பேரணியில் தெரிவித்திருந்தார். ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக அமெரிக்க போலிசாரின் வன்முறையைக் கண்டித்து என்எஃப்எல் வீரர் கோலின் கேபர்னிக் கடந்த ஆண்டு ஆட்டத்துக்கு முன்பு அமெரிக்க தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்டபோது முட்டிப்போட்டு அமர்ந்து தமது எதிர்ப்பைக் காட்டினார். இத் தகைய எதிர்ப்பை அவர் தொடங்கி வைத்தார்.

ஆட்டத்துக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட அமெரிக்க தேசிய கீதத்தின்போது முட்டிப்போட்டு அதிபர் டிரம்ப்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்எஃப்எல் வீரர்கள். படம்: ராய்ட்டரஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!