கடந்த ஒரு வாரத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் $135,000க்கும் மேல் மதிப்புள்ள வரிசெலுத்தாத சிகரெட்டுகளை குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் பறிமுதல் செய்து உள்ளது. ஜூன் 20ஆம் தேதி பதப்படுத் தப்பட்ட உணவைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட லாரி ஒன்றின் தரைப்பகுதிக்கு அடியில் வரி செலுத்தாத 1,154 சிகரெட் பெட்டிகள் அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
மறுநாள் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனம் ஒன்றில் வரி செலுத்தப்படாத 203 பெட்டி சிகரெட்டுகளும் 1,230 பாக்கெட் சிகரெட்டுகளும் கண்டுபிடிக்கப் பட்டன. சிகரெட்டுகள் வாகனத் தின் வெவ்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. லாரியில் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் வரி மற்றும் பொருள், சேவை வரியின் முழு மதிப்பு $126,392. மலேசிய காரி லிருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட்டு களின் வரி மற்றும் பொருள், சேவை வரியின் முழுமதிப்பு $9263.91 என்று அறியப்படுகிறது.
புகைப்படம்: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்