செம்பவாங்கில் ஒருங்கிணைந்த விளையாட்டு, சுகாதார மையம்

செம்பவாங் குடியிருப்பாளர்கள் பயன்பெறும் விதத்திலான நீச்சல் குளம் உள்ளிட்ட விளையாட்டு வசதிகள், உணவங்காடி நிலையம், மருந்தகம், மூத்தோர் பராமரிப்பு நிலையம் ஆகியவற்றைக்கொண்ட 'புக்கிட் கேன்பரா' எனும் ஒருங் கிணைந்த மையத்துக்கான நில அகழ்வு நிகழ்வு நடைபெற்றுள்ளது. செம்பவாங் எம்ஆர்டி நிலையத் துக்கு அருகில் 12 ஹெக்டர் நிலப்பரப்பில் இந்த மையம் அமையவுள்ளது. நேற்று காலை செம்பவாங் குழுத்தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினர்களோடு சுமார் 800 குடியிருப்பாளர்கள் 'புக்கிட் கேன்பெரா' மையத்தின் நில அகழ்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பலகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மையம் தொடர்பான பணி இப் போது தொடங்கியுள்ளது என குடியிருப்பாளர்கள் சிலர் குறிப்பிட்டதாக கல்வி அமைச்சர் ஓங் யி காங் சொன்னார். ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப் பின் முன்னெடுப்பில் அமைக்கப் படும் இந்த மையத்தில் 'விளை யாட்டு வசதிகள் பெருந்திட் டத்'தின்கீழ் 'டிஎஸ்ஆர்சி' எனப் படும் நகர விளையாட்டுகள் மற் றும் பொழுதுபோக்கு நிலையம் அமைக்கப்படவுள்ளது. சிங்கப்பூ ரில் அமைக்கப்படும் இரண்டாவது அத்தகைய நிலையம் இது.

'புக்கிட் கேன்பரா' ஒருங்கிணைந்த மையத்தின் நில அகழ்வு நிகழ்ச்சியில் சிறுவர்களுடன் (பதாகைகளை ஏந்தி இடமிருந்து) கல்வி அமைச்சர் ஓங் யி காங், உள்துறை, சுகாதார அமைச்சுகளுக்கான நாடாளுமன்ற மூத்த செயலாளர் அம்ரின் அமின், திரு விக்ரம் நாயர், போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், டாக்டர் லிம் வீ கியக் ஆகிய செம்பவாங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். படம்: சாவ் பாவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!