இயந்திரமற்ற அதிவிரைவு ‘டிரைன் 18’ சேவை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாராகி உள்ள இந்தியாவின் முதலாவது அதி விரைவு ரயில்களுக்கு ‘டிரைன் 18’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சதாப்தி ரயிலைவிடவும் 160 கி.மீ. வேகத்தில் இந்திய ரயில் தடங் களில் ஓட இவை தயாராகி வரு கின்றன. இதனால் சதாப்தி ரயிலை விட சுமார் 15% பயண நேரம் மிச்சமாகும். இந்த ‘டிரைன் 18’ ரயிலின் புதிய பெட்டிகள் எக்ஸிகியூடிவ் கோச், சாதாரண கோச் என இரு வகைகளாக அமைந்துள்ளன. எக்ஸிகியூடிவ் பெட்டியில் 56 இருக்கைகளும் எக்ஸிகியூடிவ் அல் லாத வகை பெட்டியில் 78 இருக் கைகளும் உள்ளன.

பயணிகளின் பயணப்பெட்டிகள் வைப்பதற்கு அதிக அளவில் இடவசதிகள் உள்ளன. இதன் கதவுகளும் படிகளும் தானியங்கி முறையில் பொருத்தப்பட்டுள்ளன. சுகாதார முறையிலான அதிநவீன கழிவறை வசதிகளும் உள்ளன. இந்த ரயிலின் இருமுனைகளிலும் அதன் ஓட்டுநருக்கான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதலாவது இயந்திரமற்ற அதிவிரைவு ரயில் சேவைக்கு ‘டிரைன் 18’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இப்போது புதுடெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் ஊடகத்தினரின் முன்னோட்டக் காட்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்