தேக்காவில் அலைமோதும் தீபாவளி கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை என்றாலே லிட்டில் இந்தியாவில் மக்கள் அலைமோதும் பட்சத்தில் நேற்று கூட்டம் மிகுதியாகவே இருந்தது. தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் நேற்று இந்தியர்கள் லிட்டில் இந்தி யாவின் அனைத்துப் பகுதி களிலும் சங்கமித்து தீபாவளி கொண்டாட் டத்திற்கு தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கினர். விழாக்காலம் என்றாலே கடைசி நேரம் வரை பொருட்கள் வாங்க வேண்டிய நிலை எப்படியாவது உரு வாகிறது என்றார் 45 வயது சிங்கப் பூரரான திரு வேலாயுதம் ரவி. கடந்த வாரம் இரண்டு முறை லிட்டில் இந்தியாவிற்கு வந்து பொருட்கள் வாங்கியிருந்தாலும் இறைச்சி, காய்கறிகள் போன்ற சமையல் பொருட்களை வாங்க கடைசி நேரத்தில்தான் வர வேண்டியுள்ளது என்றார் வங்கியில் காசாளராகப் பணிபுரியும் அவர்.

வழக்கமாக சில இறைச்சி விநியோகிஸ்தர்களும் ஈரச்சந்தைக் கடைக்காரர்களும் திங்கட்கிழமை களில் கடையை மூடுவார்கள் என் பதால் வாடிக்கையாளர்கள் சில ருக்குக் குழப்பம். இன்று கடை திறந்திருக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் தமிழ் முரசு நாடிய இரு இறைச்சிக் கடைக்காரர்கள் இன்று வழக்கமாக வியாபாரம் நடக்கும் என்று உறுதி அளித்து உள்ளனர். பஃப்ளோ சாலையில் அமைந்துள்ள எஸ் ஐ சாமி மினிமார்ட் கடையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணி புரியும் ஹரிகிருஷ்ணன், 30, நல்ல புதிய இறைச்சிக்காக இன்று அதி கமானோர் கடையை நாடி வரு வார்கள் என்று நம்புகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!