பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்தியவருக்கு மூவாண்டு சிறை

அழகு பராமரிப்புக் கடை நிர்வாகி ஒருவர் அவரது இல்லப் பணிப்­பெண்ணை பல மாதங்களாக துன்புறுத்தி வந்தார். சலவைத்­தூள் கலக்கப்பட்ட அழுக்கு நீரைக் குடித்தல், கொதிக்கும் தண்ணீரைத் தம்மீது ஊற்றிக்­கொள்ளுமாறு வலுக்கட்டா­யப்­படுத்தி சுயமாக தம்மைக் காயப்­படுத்திக்கொள்ள வைத்­தார் அப்பணிப்பெண்ணின் முத­லாளி.
நீதிமன்றத்தில் 15 நாள் விசாரணைக்குப் பிறகு பணிப்­பெண் பியு பியு மாரை துன்புறுத்தி­­ யதாக அவரது முதலாளி லின்டா சியா லெய் சியே குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சியாவுக்கு நேற்று மூவாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்­ பட்டது.
பணிப்பெண்ணுக்கு இழப்­பீட்டு தொகையாக $11,800ஐ செலுத்த வேண்டும் என்றும் சியாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அத்தொகையை அவரால் செலுத்த முடியாவிட்டால் கூடுதலாக ஆறு வாரச் சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்­ படும்.
“இல்லப் பணிப்பெண் துன்பு­றுத்­தப்படும் செயலை, அவரது பணி மீது நிலவும் அதிருப்தியை வைத்து ஒருபோதும் நியாயப்­படுத்த முடி­யாது,” என்று மாவட்ட நீதிபதி ஒலிவியா லோ கூறினார்.
பணிப்பெண்ணைத் தாக்கிய­தாக ஐந்து குற்றச்சாட்டுகளையும் மாசுபட்ட தண்ணீரைக் குடிக்க வைத்ததாக ஒரு குற்றச்சாட்­ டை­யும் ஜனவரி 18ஆம் தேதி சியா ஒப்புக்கொண்டார்.
பணிப்பெண்ணைத் தாக்கிய­தாக சியாவின் கணவர் லிம் தூன் லெங்கிற்கு ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்­பட்டது. பணிப்பெண்ணுக்கு இழப்பீடாக $500 செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்­ பட்டது.
சிங்கப்பூரர்களான இத்தம்ப­திக்கு, ஐந்து வயது மகள் உள்ளார். பொங்கோலில் உள்ள அவர்களது வீட்டில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களுக்கு இடையில் மேற்­கண்ட குற்றங்களைப் புரிந்தனர்.
இத்தம்பதியிடம் பணிபுரிந்த காலம் முழுவதும் மாதச் சம்பள­மான $700ஐ அப்பணிப்பெண் பெறவில்லை என்று நீதிமன்றத்­தில் தெரிவிக்கப்பட்டது.
போதிய உணவு வழங்கப்படாத­தால் அவரது உடல் எடை 50 கிலோகிராமிலிருந்து 38 கிலோ­கிராமுக்கு குறைந்தது.
2016ஆம் ஆண்டு பிப்ரவரி­யிலிருந்து அக்டோபர் மாதம் வரை சியாவிடம் அப்பணிப்பெண் பணிபுரிந்ததாக தெரிவிக்கப்­­ பட்டது. 
இந்தச் சம்பள விவகா­ ரத்தில் மனிதவள அமைச்சு தலையிட்ட பிறகுதான் அப்பணிப்­பெண்­ணுக்கு முழுச் சம்பளமும் வழங்­ கப்பட்டதாக அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞர்கள் நீதி­மன்றத்தில் தெரிவித்தனர்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓமான் கடல்பகுதியில் நேற்று இரு எண்ணெய் கப்பல்களில் குண்டு வைக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

14 Jun 2019

எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக வெளிவந்த காணொளி

விரைவில் கலைந்து செல்லுமாறு ஹாங்காங்கின் தலைமைச் செயலாளர் மேத்யூ செயுங் வெளியிட்ட காணொளியைக் கண்டுகொள்ளாத போராட்டக்காரர்களை போலிசாரின் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் தெறித்து ஓடவிட்டன. படம்: ஏஎஃப்பி 

13 Jun 2019

ஹாங்காங்: கலவரத்தை ஒடுக்க கண்ணீர்ப் புகை

ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம். படம்: ஏஎஃப்பி

12 Jun 2019

ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய சட்டத்தின் விவாதம் ஒத்திவைப்பு