பாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) மாணவர் நிக்கலஸ் லிம், சக மாணவரான மோனிக்கா பே குளிக் கும்போது மறைந்திருந்து காணொளி எடுத்த அண்மைய சம்பவம், ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம், என்யுஎஸ் மட்டுமின்றி மற்ற பல்கலைக்கழகங்களும் தங்கள் ஒழுங்கு முறை மற்றும் ஆதரவு கட்ட மைப்புகளை மறுபரிசீலனை செய்யத் தூண்டியது.

அத்துடன், கூடுதல் பாதுகாப்பு நட வடிக்கைகளும் அமல்படுத்தப்பட்டன. மேலும் பாலியல் ஒழுங்கீனம், பாலியல் செயல்களைக் கண்டு இன்பமடையும் போக்கு ஆகியன அதிகம் பேசப்பட்டன.

இத்தகைய ஒழுங்கீனச் செயல்கள் பல்கலைக்கழகங்களில் மட்டுமல்லாது, வேலையிடங்கள், வீடுகள், பொது இடங் கள் என்று எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

நமது வாழ்க்கையில் தொழில்நுட்பத் தின் ஊடுருவல் அதிகரித்துக்கொண்டே வருவதால், இதுபோன்ற செயல்கள் நிகழ்வதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படு கின்றன.

கடந்த காலத்தில், ஒளிந்திருந்து பார்ப்பதற்கு ஒருவர் கதவுகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும், தடுப் புகளைத் தாண்ட வேண்டியிருக்கும். இதனால் மற்றவர்களிடம் சிக்கிக்கொள் ளும் அபாயத்தையும் எதிர்நோக்கலாம்.

இன்று, திறன்பேசி வைத்துள்ளவர் அல்லது கேமரா உள்ள கைபேசியை வைத்துள்ளவர் யாருக்கும் தெரியாமல், யாரும் தங்களை அடையாளம் கண்டு கொள்ளாதபடி காணொளி எடுக்க முடி யும்.

அதைவிட, தொழில்நுட்பத்தின் உத வியால், எடுக்கப்பட்ட அந்தக் காணொ ளியை இணையத்தில் பதிவேற்றம் செய் வதும் சமூக வலைத்தளங்களில் பகிர் வதும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது மிரட்டுவதற்கும், பய முறுத்துவதற்கும் அல்லது தொந்தரவு செய்வதற்கும் பயன்படுத்தப்படலாம்.

இதனால் பாதிக்கப்படுவோர் அடை யும் துன்பங்களுக்கும் மன அழுத்தத்துக் கும் அளவே இருக்காது. விதிமீறல் உணர்வு, பயம், அவமானம் போன்றவை அவர்களைப் பெரிதும் பலவீனமாக்கும். இந்நிலை மாறி, பாதிக்கப்பட்டவர்கள் உடலளவிலும் மனத்தளவிலும் இயல்பு நிலைக்குத் திரும்ப அதிக காலம் பிடிக் கும்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண பன்முனை அணுகுமுறை தேவைப்படு கிறது.

முதலில், சமூகம் என்ற முறையில் நமது மனப்போக்கைக் குறிப்பிடலாம். இத்தகைய குற்றங்களின் கடுமையை நாம் புரிந்துகொண்டு, அவற்றை எதிர்கொள்ளும்போது அதற்கேற்ற நட வடிக்கையை நாம் எடுக்க வேண்டும்.

அமைதியாக இருப்பது இத்தகைய செயல்கள் மேலும் நடைபெற ஊக் குவிப்பாக இருக்கிறது. முறைகேடான நடத்தைக்கு எதிராகக் குரல் கொடுத்தல் அதைத் தடுக்க உதவுகிறது.

ஹாலிவுட்டில் தொடங்கி, உலகம் முழுவதும் பரவிய ‘#மீடூ’ இயக்கம் இதற்கு நல்ல உதாரணம். பல ஆண்டு களாக நடிகைகள் பாலியல் தொந்தர

வுக்கு ஆளாகின்றனர். அது சில நேரங் களில் பாலியல் கொடுமையாகவும் பாலி யல் வன்முறையாகவும் உருவெடுக்

கிறது.

திரைப்பட அதிபர்கள் அல்லது புகழ் பெற்ற திரைப்பட அரங்கங்களுக்கு எதி ராகச் செயல்பட்டால், அது தங்கள் நடிப் புத் தொழிலுக்குப் பாதகமாக அமைந்து விடுமோ என்ற அச்சத்தாலும் தாங்கள் சொல்வதை யாரும் நம்பமாட்டார்கள் என்ற அவநம்பிக்கையாலும் நடிகைகள் பலர் அமைதியாக இருந்து விடுகிறார்

கள்.

நடிகை ஒருவர் தமது அமைதி நிலை யிலிருந்து வெளிவந்து உண்மைகளைக் கூறியபோது, அணை உடைந்து தண்ணீர் வெளியாவதுபோல பலரும் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பாலியல் தொடர் பான கசப்பான அனுபவங்களை மனந் திறந்து கூற ஆரம்பித்தார்கள். அது பல ரது மனப்போக்கை மாற்றி அமைத்து விட்டது எனலாம்.

இந்த மனப்போக்கு மாற்றத்தால் இத் தகைய குற்றங்கள் நிகழாது என்று சொல்லிவிட முடியாது. ஆனால், பாதிக் கப்பட்டவர்கள் நடந்தவற்றைத் தைரிய மாக வெளியே சொல்லும்போது, குற்றவா ளிகள் அதிலிருந்து தப்பித்துக்கொள்

வது இன்னும் சிரமமாக இருக்கும்.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட வர்கள் போலிசில் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும். தங்கள் பெயருக் குக் களங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கத் தயங்குகிறார்கள். மற்றவர்க ளிடம் உதவி கேட்பதற்கோ ஆதரவு நாடுவதற்கோ அவர்கள் சிறிதும் தயங் கக்கூடாது. உதாரணத்துக்கு, தேவைப் பட்டால் நிபுணத்துவ ஆலோசனையும் வழங்கப்படலாம்.

இதுபோன்ற செயல்கள் வேலையிடத் திலோ அல்லது மற்ற அமைப்புகளிலோ நடந்து, அது தங்களுக்குத் தெரிய வந்தால், முதலாளிகளும் அமைப்பின் தலைவர்களும் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களைக் கேட்டு, அதுபற்றி விசா ரித்து, கொடுக்கப்பட்ட புகாரில் உள்ள உண்மையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது நாம் நினைப்பதுபோல அவ்வளவு எளிதான காரியமன்று. தங்களை யாரும் நம்பமாட்டார்கள் அல்லது தாங்கள் பிரச் சினைக்குரியவர்கள் என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்ற அச்சத்தாலோ, இதனால் முதலாளி தங்களை வேலை நீக்கம் செய்துவிடுவார் என்ற பயத்தாலோ பாதிக்கப்பட்டவர்கள் பேச மறுக்கக்கூடும்.

கொடுக்கப்படும் புகார் மேலதிகாரி

கள் அல்லது நிர்வாகத்தின் மூத்த அதி காரிகள் அல்லது வாடிக்கையாளர்க

ளுக்கு எதிராக இருந்தால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முதலாளிகள் தயங்குவார்கள்.

வேலையிடத்தில் எவ்வித ஒழுங்கீனச் செயலுக்கும் எதிராக பாரபட்சம் இல் லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வலுவான கலாசாரம் இருக்க வேண்டும். விதிமுறைகள் அனைவருக்கும் பொது வானவை என்பது நிறுவனத்தின் கோட்பாடுகளில் ஒன்று என்று தெரியப் படுத்தும் தெளிவான சமிக்ஞையாக இது திகழும்.

பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவளிக்க வும் உள்விசாரணைக்கு வழிவிடவும் நிறுவனத்தில் தெளிவான, நியாயமான முறைகள் இருப்பதை மனிதவளப் பிரிவு கள் உறுதி செய்யவேண்டும்.

இதைவிட முக்கியம், பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பங்களும் நண்பர்களும் அவர்களுக்குக் கொடுக்கும் ஆதரவு. காயம்பட்ட அந்த இதயம் மீண்டும் குண மடைவதற்கு இது மிக முக்கிய பங்களிக் கும்.

அதேவேளையில், நமது நற்பண்பு கள் கட்டிக்காக்கப்படுவதற்கு சட்டம் உறுதுணையாக இருக்க வேண்டும். பாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக நம் மிடம் எப்போதும் வலுவான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், மற்ற எல்லாவற் றையும்போல அதுவும் காலத்துக்கு ஏற்ப மாற்றங்களைப் பெற வேண்டும்.

நான் கூட்டுத் தலைமையேற்ற குற்ற வியல் சட்டங்கள் மறுபரிசீலனைக் குழு வின் பரிந்துரைகளின் அடிப்படையில் குற்றவியல் சட்டங்களில் அண்மையில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

அதில், பாலியல் குற்றங்கள் தொடர் பிலான சட்டங்களில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதுடன், தேவை ஏற் படும்போது கடுமையான தண்டனைக

ளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதில் தொழில்நுட்பம் சார்ந்த குற்றங் கள் தொடர்பிலான புதிய விதிகளும் அடங்கும்.

* பாலியல் செயல்களைக் கண்டு இன்பமடையும் போக்கு புதிய வகை குற் றமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, குட்டை பாவாடைக்

குக்கீழ் காணொளி எடுத்தல், மேலி ருந்து பெண்களின் மேலாடையைக் காணொளி எடுத்தல் போன்றவை திரைப்படங்கள் சட்டத்தின்கீழும், ‘பெண்ணின் மானத்துக்கு இழுக்கு’ விளைவித்தல் குற்றவியல் சட்டத்தின் கீழும் கையாளப்பட்டன.

* மற்ற புதிய குற்றங்களாக மறைந்தி ருந்து பார்க்கும் நடத்தைகள், பாலியல் செயல்களைக் கண்டு இன்பமடைவதற் கான காணொளிகளைத் தயாரித்து, விநியோகித்தல், அவற்றை வைத்திருத் தல் அல்லது அத்தகைய காணொளி

களைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகியவை யும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

* நெருக்கமாக இருக்கும் புகைப்படங் களை விநியோகித்தல் அல்லது விநியோ கிப்பதாக மிரட்டுதலும் (பழிதீர்த்துக் கொள்ளுதல்) மற்றொரு புதிய குற்றம்.

* மற்றவர்களுக்கு முன் ஆபாசமாக நடந்துகொள்ளுதலும் (தங்கள் ஆடை யைக் களைதல்) ஒரு புதிய குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பாலியல் தொந்தரவு உட்பட அனைத்து விதமான தொந்தரவுகளை யும் கையாளும் வகையில் துன்புறுத் தலுக்கு எதிரான சட்டத்தையும் (POHA) நாங்கள் வலுப்படுத்தியுள்ளோம்.

குற்றம் புரிபவர்களை எவ்வாறு கையா ளுவது என்பதே அடுத்த கேள்வி. குற் றச் செயலின் கடுமை, குற்றம் புரிந்தவ ரின் வயது, இத்தகைய பல குற்றங்கள் நடந்தனவா, குற்றச்செயலுக்காக சம்பந் தப்பட்ட நபர் உண்மையிலேயே வருந்து கிறாரா, குற்றம் புரிவதற்கு முக்கியமான காரணிகள் உள்ளனவா என்பது போன்ற வற்றை ஆராய்ந்து குற்றச்செயலின் கடுமை நிர்ணயிக்கப்படும்.

எடுத்துக்காட்டுக்கு, குற்றம் புரிந்தவர் மனநோயால் பாதிக்கப்பட்டவராகவும் அல்லது ஒரு பழக்கத்துக்கு அடிமையான வராகவும் அல்லது எது சரி எது தவறு என்று புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லா தவராகவும் இருக்கலாம்.

இறுதியாக, எப்படிப்பட்ட சட்டங்கள் இருந்தாலும் எவ்வளவு கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை நாம் மேற் கொண்டாலும், சிறந்த பாதுகாப்பு என்பது நமது குடிமக்களின் கைகளில்தான் உள் ளது.

அவர்களிடம் உள்ள வலுவான நல் லொழுக்கம், நல்ல பண்புநெறிகள், மற்ற வர்களிடம் கொண்டிருக்கும் மதிப்பு ஆகியவைதான் சிறந்த பாதுகாப்பாக இருக்கமுடியும்.

இதை ஒரு வழிகாட்டியாக நாம் பயன்படுத்தினால், மக்கள் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட எவ்வித காரணமும் இருக்கமுடியாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!