புதிய வரவுசெலவுத் திட்டத்தில் பொறுப்புடன் கூடிய உதவிகள்

முரசொலி

பட்­ஜெட் என்று சொல்­லப்­ப­டு­கின்ற வர­வு­செ­ல­வுத் திட்­டம், உலக நாடு­களில் பொறுப்­பில் இருக்­கும் அர­சாங்­கங்­கள் ஆண்டுதோறும் அத­ன­தன் நாடாளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யக்­கூ­டிய மிக முக்­கி­ய­மான ஓர் அறிக்­கை­யா­கும்.

அர­சாங்­கம், வரும் ஆண்­டில் செலவு செய்ய இருக்­கும் திட்­டங்­கள், அர­சுக்­குக் கிடைக்­கக்­கூடிய வரு­வாய், அவற்­றுக்­கான விவேகமிக்க வழிகள், கொள்கை, கோட்­பா­டு­கள் எல்­லாம் உள்ளூர், உலக நில­வ­ரங்­களை மட்­டு­மன்றி, கடந்த கால, நிகழ்­கால, வருங்­கால கண்­ணோட்­டத்­துடன் உரு­வாக்­கப்­பட்டு இருக்­கும்.

சிங்­கப்­பூ­ரைப் பொறுத்­த­வரை மக்­க­ளின் கருத்து­கள், யோச­னை­கள் திரட்­டப்­பட்டு அவற்றை அர­சாங்­கம் திறம்­பட ஆராய்ந்து, பல மாத கால பணி­க­ளின் பல­னாக ஆண்­டு­தோ­றும் வர­வு­செலவுத்­ திட்­டம் உரு­வாக்­கப்­ப­டுகிறது.

அதன்­படி, துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்சரு­மான லாரன்ஸ் வோங் இம்­மா­தம் 14ஆம் தேதி 2023 வர­வுசெ­ல­வுத் திட்­டத்தை நாடா­ளு­மன்றத்தில் தாக்­கல் செய்­தார்.

அந்­தத் திட்­டம், அதிக பண­வீக்­கம், ஜிஎஸ்டி எனப்­படும் பொருள், சேவை­ வரி உயர்வு ஆகி­ய­வற்­றால் ஏற்­ப­டக்­கூ­டிய கூடு­தல் சிர­மங்­க­ளைச் சமா­ளிக்க சிங்­கப்­பூ­ர­ர்க­ளுக்கு மேலும் அதிக உத­வி­க­ளை வழங்குகிறது.

குழந்தை பெற்­றுக்கொள்­ளும் பெற்­றோ­ருக்கு ஏற்­ப­டக்­கூ­டிய சிறார் பரா­ம­ரிப்­புச் செல­வைச் சமா­ளிக்க ஆத­ரவுத் திட்­டங்­கள், ஊழி­யர்­கள், முதி­யோர், உடற்­கு­றை­யா­ளர்­கள், முன்­னாள் குற்ற வாளி­கள் உள்­ளிட்ட அனைத்துத் தரப்­பி­ன­ருக்­கும் பல­த­ரப்­பட்ட உத­வி­கள் கிடைக்க திட்­டம் வழிவகுக்கிறது.

நாட்­டுக்குக் கிடைத்­துள்ள பொரு­ளி­யல் அனு கூலங்­களை மக்­க­ளுக்கு ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்­டு­கள், ரொக்க வழங்கீடுகள் வழி­யா­க­வும் இதர பல்­வேறு திட்­டங்­கள், செயல்­திட்­டங்­கள் மூல­மா­க­வும் அர­சாங்­கம் திருப்­பிக் கொடுக்­கிறது. அர­சாங்­கம், தனது பொறுப்புகளை விவேகமான முறை­யில் நிறை­வேற்­றுகிறது என்பது அத்திட்டம் மூலம் தெரியவருகிறது.

பிர­த­மர் லீ சியன் லூங், பத்­தாண்­டு­க­ளுக்கு முன்-அதா­வது 2013ஆம் ஆண்டு ஆற்­றிய தேசிய தினப் பேரணி உரையில் ‘வருங்­கால புதிய வழி’ என்ற ஓர் அறி­விப்பை விடுத்­தார்.

இப்­போது இருப்­ப­தை­விட இன்­னும் நியா­ய­மிக்க சமூ­கத்தை உரு­வாக்­கு­வது, மக்­களில் மேலும் பல­ரை­யும் உள்­ள­டக்­கு­வது அதன் இலக்கு என்று அவர் அறி­வித்­தார்.

‘அத்­த­கைய சமூ­கத்தை உரு­வாக்­கு­வ­தில் அர­சாங்­கம் திட்­ட­வட்­ட­மாக இருக்­கிறது. ஒவ்­வொரு­வருக்­கும் ஆத­ரவு அளிப்­ப­தில் அர­சாங்­கம் இன்­னும் பெரும் பங்­காற்­றும். நாடு அடை­யும் வெற்­றி­களில் ஒவ்­வொரு குடி­ம­கனுக்­கும் நியா­ய­மான பங்கு கிடைக்­கும்.

‘சமூ­கப் பாது­காப்பு கட்­ட­மைப்­பு­கள் வலு­வடை­யும். ஒவ்­வொ­ரு­வ­ரும் வாழ்க்­கை­யில் உயர வழி­கள் திறந்­தி­ருக்­கும்’ என்று பிர­த­மர் லீ அப்­போது அறி­வித்­தார்.

துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் இப்­போது தாக்­கல் செய்து இருக்­கும் வர­வு­செ­ல­வுத் திட்­டம், பிர­த­ம­ரின் இந்த அறி­விப்பை நன்கு பிரதி­பலிக்­கிறது. சிங்­கப்­பூ­ரர்­க­ளின் அன்­றாட தேவை­களுக்கு உறு­து­ணை­யாக இருந்து துணை நிற்கும் என்ற அர­சாங்­கத்­தின் பொறுப்பை இந்த வர­வு­செ­ல­வுத் திட்­டம் மீண்­டும் உறு­திப்­ப­டுத்தி இருக்­கிறது. அதோடு மட்­டு­மன்றி, நாட்­டின் நீண்­ட­கால நலன்­களைப் பாது­காப்­ப­தற்­கும் அர­சு பொறுப்பு ஏற்கும் என்­ப­தும் இதன் மூலம் தெளி­வாகி இருக்­கிறது.

நிறு­வ­னங்­க­ளுக்­கும் புதிய திட்­டத்­தில் பல சலு­கை­களும் அனு­கூ­லங்­களும் அடங்கி இருக்­கின்­றன. இப்­போது உலக நில­வ­ரங்­கள் மாறி உள்ளன. பல நாடு­கள் தன் நல­னில் மட்­டும் அதிக கவ­னத்­தைச் செலுத்­தும் ஓர் அணு­கு­முறையை கடைப்­பி­டிக்­கின்­றன. தன்­னைப் பேணித்­த­னம் அதி­க­ரிக்­கிறது. உத்­தி­பூர்­வ­மான தொழில்­து­றை­களை வலு­வாக பெருக்­கிக்கொள்ள பல நாடு­களும் விடாப்­பி­டி­யாக ஆத­ர­வளிக்கின்றன.

சிங்­கப்­பூ­ரர்­கள் ஆண்­டுக்­காண்டு அர­சாங்க ஆத­ர­வு­க­ளையே பெரி­தும் நம்பி இருந்து வருவது இய­லாத ஒன்று. ஒவ்­வோர் ஆண்­டும் வரவுக்கு மேல் செலவு செய்­வது என்­பது எந்த ஓர் அரசுக்கும் கட்­டுப்­ப­டி­யா­காத ஒன்­றா­கவே ஆகி­வி­டும் என்­பது திண்­ணம்.

அர­சாங்­கத்­தி­டம் அதிக வளம் இருந்­தால்­தான் அது அதி­க­மான வளத்தை மக்­க­ளுக்கு விநி­யோ­கிக்க முடி­யும் என்­பது வெளிப்­ப­டை­யான ஒன்று.

நிதி அமைச்­சரின் புதிய வர­வு­செ­ல­வுத் திட்­டம், அர­சாங்­கம் பெற்றிருக்­கும் பொரு­ளி­யல் அனு­கூலங்­களை மக்­க­ளுக்குப் பகிர்ந்து அளிக்­கிறது. அதே­நே­ரத்­தில், பொறுப்­புள்ள ஒன்­றா­க­வும் அந்­தத் திட்­டம் திகழ்­கிறது.

இத்­த­கைய ஒரு சூழ­லில், சிங்­கப்­பூ­ரர்­க­ளின் பொறுப்பு முன்­பை­விட கூடு­கிறது. இப்­போ­தைய உலக நில­வ­ரங்­களை வெற்­றி­க­ர­மான முறை­யில் சமா­ளித்து தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி பெற வேண்­டு­மா­னால் சிங்கப்பூரும் சிங்­கப்­பூ­ரர்­களும் இப்­போது இருப்­ப­தை­விட அதிக உற்­பத்­தித்­திறனோடு, அதிக போட்­டித்­தி­றனோடு திகழ வேண்­டும் என்­பது கட்­டா­ய­மாகிறது.

இதற்கு உத­வும் வகை­யில் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் புதிய ஒரு செயல்­திட்­டம் இடம்­பெற்று இருக்­கிறது. ‘நிறு­வன புத்­தாக்க திட்­டம்’ என்ற அந்­தத் திட்­டம் ஆய்வு உரு­வாக்­கம் போன்ற நடை­மு­றை­களில் ஈடு­படும் நிறு­வ­னங்­க­ளுக்கு அதிக வரிக்­க­ழி­வு­களை வழங்­கு­கிறது.

சிங்­கப்­பூர் உல­க­ம­ய­மான நாடு. ஆகை­யால், நிறு­வ­னங்­க­ளுக்கு வரி விதிப்­பது உள்­ளிட்ட பல­வற்றிலும் உல­கத் தரங்­க­ளுக்குப் பின்தங்கிவிடாமல் அது இருந்துவர வேண்­டும்.

சிங்­கப்­பூரைப் பொறுத்­த­வரை பொரு­ளி­யல் போட்­டித்­தி­ற­னை­யும் சமூக சமத்­து­வத்­தை­யும் கட்டிக்­காக்க வேண்­டும் என்­பது நோக்­கம். ஆனால், இது இலே­சான செயல் அல்ல.

இந்த நோக்­கத்தை நிறை­வேற்ற புதிய வரவு­செ­ல­வுத் திட்­டம் பெரி­தும் உத­வும். இதற்கு சிங்­கப்­பூ­ரர்­களும் ஆத­ரவு அளித்து தங்­களை மேம்­ப­டுத்தி கொண்டு வர­வேண்­டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!