வளர்ச்சியை உறுதிப்படுத்த, வளர்ச்சிக்கு மக்களை வழிப்படுத்த...

சிங்­கப்­பூ­ரில் அண்­மை­யில் தாக்­கல் செய்­யப்­பட்ட 2023 வரவுசெல­வுத் திட்­டம், வழக்­கம்­போல் பொருளி­யலை உசுப்­பி­விடுவதை­யும் பொரு­ளி­யல் வளர்ச்­சிக்கு ஆத­ர­வாக தன் மக்­க­ளுக்கு வளத்தைத் திருப்­பிக்கொடுப்­ப­தை­யும் இரண்டு கண்களா­கக் கருதி அவற்­றில் ஒரு­மித்த கவ­னத்­தைச் செலுத்தி இருக்­கிறது.

வளர்ச்சி இருந்­தால்­தான் மகிழ்ச்சி, செழிப்பு, வளம், வாய்ப்­பு­கள், முன்னேற்றம் என்­ப­தால் ஆண்டுக்கு ஆண்டு பொரு­ளி­யல் வளர்ச்சியைச் சாதிக்­கத் தோதாக நீண்ட நெடுங்­கா­ல­மாகவே வரவுசெலவுத் திட்­டத்­தில் கணி­ச­மான அளவுக்குத் திட்­டங்­கள் இடம்­பெற்று வந்­துள்­ளன.

புதிய வரவுசெல­வுத் திட்­டத்­தில், நெடும் பட்­டி­யல்­போ­டும் அள­வுக்குப் பொரு­ளி­யல் திட்­டங்­களில் பல­வும் மேம்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளன.

தேசிய உற்பத்­தித்­தி­றன் நிதிக்கு $4 பில்லியன் ஊக்­கு­விப்பு; ஐந்து வகை­யான புத்­தாக்­கத் துறை­களில் நிறு­வ­னங்­கள் ஈடு­பட ஊக்­கு­விக்­கும் வகை­யில் புதி­தாக அறி­விக்­கப்­பட்டு உள்ள நிறு­வன புத்­தாக்­கத் திட்­டம்; உள்­ளூர் நிறு­வனங்கள் விரி­வடைய உத­வும் சிறிய, நடுத்­தர நிறு­வன இணை முத­லீட்டு நிதித் திட்ட மேம்­பாடு; நிறு­வ­னங்­கள் கடன்­பெற உத­வும் நிறு­வன நிதித் திட்­டம் நீட்­டிப்பு ஆகி­ய­வற்றை எடுத்­துக்காட்­டா­கச் சொல்­லாம்.

இவற்­றோடு, பொரு­ளி­யல் வளர்­ச்சிக்கான வாய்ப்பு­களை அதி­க­மாக்­கும் இதர பல திட்டங்களும் புதிய வரவுசெல­வுத் திட்­டத்தில் இருக்­கின்­றன.

துவாஸ், சாங்கி விமான நிலைய முனை­யம் 5, எம்­ஆர்டி விரி­வாக்­கம் போன்ற பிரம்­மாண்ட அடிப்­படை வச­தித் திட்­டங்­கள் ஒரு பக்­கம், உள்­நாட்­டி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் சிங்­கப்­பூ­ரின் இணைப்பு வச­தி­களைப் பலப்­ப­டுத்­தும் வகையில் 27 தாராள வர்த்­தக உடன்­பா­டு­களை உள்­ளடக்கிய கட்­டமைப்பு மறு­பக்­கம் என்று இதர பல­வும் இவற்­றில் உள்­ள­டங்­கும்.

இருந்­தா­லும்­கூட, நாடா­ளு­மன்­றத்­தில் புதிய வரவுசெல­வுத்­ திட்­டம் தாக்­க­லான பிறகு தொழில்­து­றை­யில் சில வட்­டா­ரங்­களில் ஒரு கவலை தலை­தூக்கி இருப்­ப­தா­கத் தெரியவரு­கிறது.

அதா­வது, அர­சாங்­கத்­தின் ஒரு­மித்த கவ­னம் பொரு­ளி­யல் வளர்ச்­சி­யில் இருந்து, வளத்தை மக்­க­ளுக்­குப் பிரித்­துக் கொடுப்­ப­தில் அதி­கம் திரும்பி இருக்­கி­றதோ என்று அந்­தத் துறை­யி­னர் சிலர் கவ­லைப்­ப­டு­கி­றார்­கள். சமூ­கக் கொள்­கை­களில் அதி­கம் கவ­னம் செலுத்­திப்­ப­டு­கிறது, பொரு­ளி­யல் வளர்ச்­சிக்­குப் போதிய அள­வுக்குத் திட்­டங்­கள் இல்லை என்று விமர்­ச­கர்­களும் கருத்து தெரி­வித்து இருக்­கி­றார்­கள்.

ஆனால் அனைத்­தை­யும் சீர்­தூக்­கிப் பார்க்­கை­யில் அப்­ப­டிப்­பட்ட ஒரு கவலை அநாவ­சி­ய­மான ஒன்று என்­று­தான் தெரி­கிறது. கொவிட்-19 தலை­வி­ரித்து ஆடி­ய­போது மக்­களுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் உதவ வேண்டிய அவ­சர அவ­சி­யம் ஏற்­பட்­டதை உணர்ந்து அரசாங்­கம் ஏரா­ள­மான உத­வி­களை, ஆத­ர­வு­களைப் பல­முறை துணை வர­வு­செ­ல­வுத் திட்­டங்­கள் மூல­மா­க­வும் செய்­தது.

அந்த உத­வி­களில் சில இன்­ன­மும் ஓர­ளவுக்­குத் தொடர்­கின்­றன. கொரோனா காலத்­தின்போது உல­கப் பொரு­ளி­ய­லும் உள்­ளூர் பொரு­ளி­ய­லும் முடங்கி, பல துறை­கள், நிறு­வ­னங்­கள் மூடப்­பட்டு, எதிர்­கா­லம் கேள்­விக்­கு­றி­யாகி, மக்­கள் வேலை இழந்து, வெளி­யே­கூட சென்­று­வர இய­லாத நிலை ஏற்­பட்டபோது முத­லில் மக்­கள் மீது அதிக அவ­சர கவ­னம் செலுத்த வேண்­டிய தேவை ஏற்­பட்­டது.

ஆனால் இப்­போது காலம் மாறி இருக்­கிறது. கட்­டுப்­பா­டு­கள் அகன்று பொரு­ளி­யல் சூடு­பி­டிக்­கத் தொடங்கி இருக்­கிறது.

இத­னால் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தின் ஒரு­மித்த கவ­னம் இப்போது பொரு­ளி­யல் வளர்ச்சி, செல்­வத்­தைப் பகிர்ந்­து­கொ­டுப்­பது ஆகிய இரண்­டி­லும் ஒரு சேரத் திரும்பி இருக்­கிறது.

பொது­வா­கவே பொரு­ளி­ய­லும் சமூ­கக் கொள்கை­களும் சேர்ந்­து­தான் செயல்­படும். இரண்­டை­யும் பிரித்­துப் பார்ப்­ப­தை­விட சேர்த்­துப் பார்ப்­ப­துதான் சரி­யா­ன­தாக இருக்­கும்.

அதா­வது, இவை இரண்­டும் ஒன்று தாழ்ந்து ஒன்று உய­ரும் தராசு அல்ல. இரண்­டும் இரண்டு சக்­க­ரங்­க­ளாகச் சேர்ந்து சுழன்று வளர்­ச்சி­யைச் சாதிப்­பவை. இந்த இரண்டு சக்­க­ரங்­களும் முன்னேற்றப் பாதை­யில் சர­ள­மாக ஓட ஏது­வாக புதிய வர­வு­செ­ல­வுத் திட்­டம் அமைந்துள்ளது.

செல்­வத்தை மக்­க­ளுக்கு மீண்­டும் விநி­யோ­கிப்­பது உள்­ளிட்ட ஏறு­முகப் போக்­கு­களுடன் கூடிய சமூ­கக் கொள்­கை­கள் எப்­போதுமே பொரு­ளி­யல் வளர்ச்­சிக்கு ஆத­ர­வாக இருக்­கும் என்­பது பொரு­ளி­யல் ஆய்­வா­ளர்­களின் கருத்து.

மிகக் கவ­ன­மாகத் திட்­ட­மிட்டு பொரு­ளி­யல் வளத்தை மக்­க­ளுக்குத் திருப்பிக் கொடுக்­கும் அணு­கு­மு­றை­யைக் கைக்­கொண்­டால் காலப்­போக்­கில் நிதி நிலை நிச்­ச­யம் மேம்­படும். இதில் வரி வளத்தை விரி­வு­ப­டுத்­து­வது, முன்­னி­லும் அதி­க­மான மக்­கள் ஓய்வுக் காலத்­தில் போதிய நிதி­வ­ளத்­தைக் கொண்­டி­ருக்­கச் செய்­வது ஆகி­யவை எல்­லாம் உள்­ள­டங்­கும்.

இப்­ப­டிச் செயல்­ப­டு­வ­தன் மூலம் எதிர்­கால நிதித் தேவை­களைக் குறைத்­துக்­கொள்­ள­லாம். நிதி வளம் வலு­வாக இருந்­தால் பொது முதலீடு­களுக்கு அதிக வழி பிறக்­கும். இது­வும் வளர்ச்­சியைத் தூண்­டி­வி­டும்.

சுகா­தா­ரம், கல்­வியை உயர்த்த செய்­யப்­படும் சமூக முத­லீ­டு­கள் ஊழி­யர்­க­ளின் தரத்தை உயர்த்­தும். இதன்­ வி­ளை­வாக உற்­பத்­தித்­தி­றன் கூடும்.

பொரு­ளி­யல் வள­ர­வேண்­டு­மா­னால் அதற்கு உற்­பத்­தித்­தி­றன் அதி­க­ரிப்பு மிக முக்­கிய உந்து சக்தி என்­பதை மறந்­து­வி­டக்கூடாது.

நிதி வளத்­தைச் செல­விட்டு ஊழி­யர்­க­ளின் தேர்ச்­சி­களை மேம்­ப­டுத்­தி­னால், அவர்­கள் காலத்­திற்­கேற்ப புதுப்­புதுத் தேர்ச்­சி­களைக் கற்­பிக்க ஏற்­பா­டு­க­ளைச் செய்து வந்­தால் ஊழி­யர்­க­ளுக்கு மட்­டு­மன்றி நிறு­வ­னங்­க­ளுக்­கும் நன்மை.

முதி­ய­வர்­க­ளுக்கு அளிக்­கப்­படும் சம்­பள மானி­யங்­கள் பொரு­ளி­யல் ரீதி­யில் உத­வு­ம். இந்­தக் கொள்­கை­யால் ஊழி­யர் அணி வள­ம­டை­யும்.

மக்­க­ளி­டையே ஏற்­றத்­தாழ்வைக் குறைப்­ப­தற்­கான சமூ­கக் கொள்­கை­கள் பிணைப்பு­மிக்க, நல்­லி­ணக்­க­மிக்க சமூ­கத்­தைச் சாதிக்­கும்.

இத­னால் அர­சி­யல் நிலைப்­படும். இது எதிர்­கால வளர்ச்­சியை உறுதிப்படுத்தும் என்­ப­தால் தொழில்­து­றை­யில் சில தரப்­பு­களில் நில­வும் கவலை தேவை­யற்ற ஒன்று என்­பதே திண்­ணம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!