மாணவரைக் கவர்ந்து ஈர்க்கும் கல்விமுறை காலத்தின் கட்டாயம்

முரசொலி

ஒரு நாட்­டின் குடி­மக்­கள், நற்­கு­டி­மக்­க­ளாக பரிணமிப்­ப­தில் கல்வி நிலை­யங்­கள் ஆற்­றும் பணி­களுக்கு ஈடு இணை இல்லை. அது­வும், மனித வளத்தை மட்­டுமே ஒரே வள­மா­கக்­கொண்ட சிங்­கப்­பூ­ரைப் பொறுத்­த­வரை, கல்வி நிலை­யங்­களுக்கு உள்ள பொறுப்பு இன்­னும் அதி­கம் என்­ப­தைச் சொல்­லித் தெரிய வேண்­டி­ய­தில்லை.

சிங்­கப்­பூ­ரின் கல்வி நிலை­யங்­களும் தேசிய சேவை ஏற்­பா­டும் சாதித்­துள்ள, சாதித்து வரு­கின்ற சாத­னை­களை, நாடு மட்­டு­மன்றி உல­க­மும் கண்­கூ­டா­கக் கண்டு வரு­கிறது.

தொடக்­கப்­பள்ளி, உயர்நிலைப்­பள்ளி, உயர் கல்வி உள்­ளிட்ட ஒவ்­வொரு நிலை­யி­லும் உன்னத நிலையை மாண­வர்­கள் எட்ட தொடர்ந்து ஊக்கமும் ஆக்­க­மும் அளிக்க வேண்­டும் என்­பதே நம் கல்வி முறை­யின் குறிக்­கோ­ளாக இருப்­ப­தால் சிங்­கப்­பூர் மாண­வர்­கள் உலக அள­வில் கொடி­கட்டிப் பறக்­கி­றார்­கள்.

‘பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு, மேம்­பாடு’ என்ற ஓர் அமைப்பு உலக அள­வில் செயல்­பட்டு வரு­கிறது. அந்த அமைப்பு, உல­க­ளா­விய அள­வில் பன்­னாட்டு மாண­வர்­க­ளை­யும் மதிப்­பி­டு­கிறது.

இதற்­காக ‘அனைத்­து­லக மாண­வர் மதிப்­பீட்டுச் செயல்­திட்­டம்’ என்ற ஓர் ஏற்­பாட்டை அது அம­லாக்கி வரு­கிறது.

உல­கம் முழு­வ­தை­யும் சேர்ந்த 15 வய­துள்ள கிட்­டத்­தட்ட 600,000 மாண­வர்­கள் அதில் கலந்து­கொண்டு தேர்வு ஒன்றை எழு­து­கி­றார்­கள்.

அந்­தத் தேர்வு, குறிப்­பாக அறி­வி­யல், கணி­தம் நூல் வாசிப்பு போன்­ற­வற்­றில் மாண­வர்­க­ளின் தேர்ச்சி எந்த அள­வுக்கு இருக்­கிறது என்­பதை மதிப்­பி­டு­கிறது. சிங்­கப்­பூர் மாண­வர்­கள் மிக அதிக மதிப்பெண்­க­ளு­டன் உன்­ன­த­நி­லை­யில் இருக்­கி­றார்­கள் என்­பது அந்த மதிப்­பீட்­டின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

அறி­வு­நிலை ஒரு­பு­றம் இருக்க, உல­கில் உடல் நல­னு­டன் அதிக காலம் வாழ்­கின்ற மக்­க­ளா­க­வும் சிங்­கப்­பூரர்கள் இருக்­கி­றார்­கள். இதற்கான முக்­கியமான கார­ணங்­களில் தேசிய சேவை ஒன்று என்­பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நாட்டு மக்­களை, காலத்­திற்கு ஏற்ற குடி­மக்­களாகத் தொடர்ந்து ஆயத்­தப்­ப­டுத்தி வரு­வ­தில் கல்விமுறைக்கு அதிக பங்கு இருக்­கிறது.

காலம் மாறி­வ­ரு­கிறது. அந்த மாற்றம் தொடர்ந்து சூடு­பி­டித்து வருகிறது. மாற்றத்­திற்கு ஏற்ப கல்விமுறை­யும் மாற வேண்­டியது மேலும் அவ­சி­ய­மாகிவிட்டது. பொரு­ளி­யலின் பல துறை­களும் தனித்து செயல்படாமல் ஒன்­று­டன் ஒன்று பின்­னிப்­பிணைந்து செயல்­ப­ட­வேண்­டிய போக்கு கூடி­விட்­டது.

பல ஆண்­டு­க­ளைச் செல­விட்டு, ஒரு குறிப்­பிட்ட துறை­யில் மட்­டும் தேர்ச்சி கொண்­டுள்ள மாண­வர்­களை உரு­வாக்­கு­வது இனி­மேல் ஒத்து­வராத ஒரு போக்­கா­கத்­தான் இருக்­கும் என்பது திண்ணம். மாண­வர்­கள் இனிமேல் நாலும் தெரிந்­த­வர்­களாக, முழுமையான அறிவு, ஆற்­றல், தேர்ச்சி மிக்­க­வர்­க­ளாக இருக்­க­வேண்­டும் என்­பது காலத்­தின் கட்­டா­ய­மாகிவிட்­டது.

இதற்கு ஏற்ப மாண­வர்­க­ளைக் கவர்ந்து ஈர்த்து, அவர்­களை அதிக மதிப்­பெண் என்ற ஒரு கட்­டாய வட்டத்தை மட்­டும் சுற்­றி­சுற்­றி­வ­ரும்­படி சிக்க வைக்­கா­மல் மாண­வர்­க­ளின் விருப்­பத்­திற்கு வாய்ப்பு கொடுத்து அவர்­கள் பல­துறை அறி­வைப் பெறச் செய்­ய­வேண்­டிய ஒரு பெரும் பொறுப்பு, கடமை கல்விமுறைக்கு ஏற்­பட்­டுள்­ளது.

இதைக் கருத்­தில்கொண்டுதான் சிங்­கப்­பூ­ரின் கல்விமுறை­யில் படிப்­ப­டி­யாக, கட்­டம் கட்­ட­மாக பல மாற்­றங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

மாண­வர்­க­ளி­டம் பன்­மய ஆற்­ற­லைப் பேணி வளர்ப்­ப­தும் பல­வற்­றை­யும் கற்­றுக்­கொள்­வ­தற்­கான வழி­மு­றை­களை, வாய்ப்­பு­களைப் பர­வ­லாக்கு­ வ­தும் அந்த மாற்றங்களின் நோக்­கம்.

இதை ஒட்டி கல்வி அமைச்சு, அண்­மையில் சில மாற்­றங்­களை அறி­வித்­தது. எதிர்­கால வேலை உல­கிற்­குத் தேவை­யான தேர்ச்­சி­களைப் போதிப்பதோடு, தங்­கள் கல்வி பயணத்­திற்குத் தாங்­களே பொறுப்பு எடுத்­துக்­கொள்ளும் வகையில் மாண­வர்­களுக்கு நீக்­குப்­போக்­கான ஏற்­பாடு­களை அதி­கம் ஏற்­ப­டுத்­தித் தரு­வ­து அந்த மாற்­றங்­களின் நோக்­கம்.

‘ஏ’ நிலை தேர்­வுக்­கான சுமை­க­ளைக் குறைத்து, மாண­வர்­கள் தங்­கள் நாட்­டங்­களைத் தொடர்­வதற்கு வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தித் தருவது, பெரிய­வர்­கள் தங்­கள் வாழ்­நாள் கல்­விப் பயணத்­தில் பின்­னர் பட்­டப்­படிப்பைத் தொடர வழி அமைத்­துத் தரு­வ­தற்­கான மாற்­றங்­கள் அறி­விக்­கப்­பட்டு உள்­ளன.

தொடக்­கக் கல்­லூ­ரி­கள், மில்­ெல­னியா கல்வி நிலை­யத்­தைச் சேர்ந்த மாண­வர்­கள், 2026 முதல் பல்­க­லைக்­க­ழக படிப்­புக்­குச் சேரும்­போது கவனத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­படும் பாடங்­களில் மாற்றங்­கள் இடம்­பெற இருக்­கின்­றன.

தொடக்­க­நிலை, உயர்­நிலை மாண­வர்­க­ளைப் பொறுத்­த­வரை, அரை­யாண்­டுத் தேர்­வு­கள் இந்த ஆண்­டில் கைவி­டப்­ப­டு­கின்­றன. அதேபோல் தொடக்­கக் கல்­லூ­ரி­கள், மில்­ெல­னியா கல்வி நிலை­யத்­தைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்­கும் 2024 முதல் இத்தேர்­வு­கள் படிப்­ப­டி­யாக அகற்­றப்­படும்.

மற்­றொரு மாற்­ற­மும் இடம்­பெ­று­கிறது. மாண­வர்­கள் தேர்வு முடி­வு­க­ளைப் பற்றி கவ­லைப்­படாமல் தங்­கள் விருப்­பங்­க­ளைத் தொடர அதிக வாய்ப்­பு­களை வழங்­கும் மாற்­றங்­களும் 2024 முதல் இடம்­பெ­று­கின்­றன.

இவை எல்­லாம் மிக­வும் வர­வேற்­கத்­தக்க மாற்­றங்­கள் என்­ப­தில் ஐய­மில்லை. இவை இந்த நூற்­றாண்­டில் தேவைப்­ப­டக்­கூ­டிய போட்­டித்­திறன் மேம்­பாட்­டுக்­கான அதிக நேரத்தை மாண­வர்­களுக்கு ஒதுக்­கித் தந்து உத­வும்.

இளம்­ வ­யது மாண­வர்­கள் உலகை தங்­கள் விருப்­பத்­திற்கு ஏற்ப ஆராய்ந்து அறிய வேண்­டும் என்ற எண்ண ஓட்­டத்­து­டன், எதிர்­கா­லத்­திற்கு திறம்­பட தயா­ராக வேண்­டும் என்ற ஊக்­கத் துடன் திகழ்­ப­வர்­கள். இந்த நோக்­கம் நிறை­வேற அவர்­க­ளுக்கு அதிக நேரம், வாய்ப்­பு­கள் கிடைக்க வேண்­டும். மாண­வர்­க­ளின் கட்­டாய பாடத்­திட்ட கற்­றல் சுமை கூடியவரை குறைய வேண்­டும்.

இதை அண்­மைய மாற்­றங்­கள் சாதிக்­கும். சிங்­கப்­பூர் மாண­வர்­கள் நாலும் அறிந்­த, முழுமை­யா­ன­வர்­க­ளாகப் பரி­ண­மிக்க அவை உத­வும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!