உள்ளூர் ஊட்டச்சத்து காய்கறிகளில் ஒருமித்த நாட்டம் திரும்பட்டும்

முரசொலி

ஒரு நாடு கூடு­மா­ன­வரை சுய­சார்­பு­டன் திகழ வேண்­டி­யது முக்­கி­ய­மான ஒன்று. அதுவும் உணவைப் பொறுத்­த­வரை சுய­சார்பு என்­பது மிகப்­பெ­ரிய அனு­கூ­ல­மாக இருக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை.

இருந்­தா­லும்­கூட சிங்­கப்­பூர் போன்ற வேளாண் நிலப்­ப­ரப்பு இல்­லாத நாடு­க­ளைப் பொறுத்­த­வரை உணவு சுய­சார்பு என்­பது பெரும் போராட்­டம்­தான்.

சிங்­கப்­பூ­ரில் நமக்கு வேண்­டிய காய்­க­றி­கள் எல்­லாம் நம் மண்­ணி­லேயே விளைந்­தால்­தான் நல்­லது, அது­தான் தேவை என்­பதை மறுப்­ப­வர்­கள் இருக்­க­மாட்­டார்­கள்.

என்­றா­லும்­கூட, பல அம்­சங்­கள் கார­ண­மாக, குறிப்­பாக நிலப்­பற்­றாக்­குறை கார­ண­மாக நாம் இன்­ன­மும் உண­வைப் பொறுத்­த­வரை சய­சார்பு நிலையை அடை­ய­வில்லை. கடந்த காலங்­களில் நாட்டு மேம்­பாட்­டில் ஒருமித்த கவ­னம் செலுத்­தப்­பட்டு, வேளாண்­து­றை­யில் போதிய கவ­னத்­தைச் செலுத்த இய­லாத நிலை இருந்­து­ வந்­தது.

இந்தச் சூழலிலும், இங்கு இப்­போது 110க்கும் மேற்­பட்ட காய்­கறிப் பண்­ணை­கள் செயல்­ப­டு­கின்­றன. 2021ஆம் ஆண்டு நில­வ­ரப்­படி, இங்கு பயன்­ப­டுத்­தப்படும் மொத்த காய்­க­றி­களில் 4.3% அளவை அவை உற்­பத்தி செய்து கொடுத்­தன.

பல வகை கீரை­கள், காளான் போன்ற உணவுப் பொருள்­களே இங்கு அதி­கம் விளை­விக்­கப்­படுகின்­றன. அதே­போல் உள்­ளூ­ரில் செயல்­படும் முட்டை பண்­ணை­கள், இங்கு பயன்­ப­டுத்­தப்­படும் மொத்த முட்­டை­களில் 30%க்கும் அதி­க­மா­ன­அளவுக்கு உற்­பத்தி செய்­கின்­றன.

உண­வைப் பொறுத்­த­வரை சுய­சார்பை கூடுமா­ன­வரை எட்ட வேண்­டும் என்ற நோக்­கத்துடன் அர­சாங்­கம் அதிநவீன தொழில்­நுட்பப் பண்ணை­க­ளுக்கு அதிக ஆத­ரவு அளித்து வரு­கிறது. குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் கொஞ்­சம் மண் பகுதி கிடைத்­தா­லும் அதைக் காய்­கறி உற்­பத்­திக்கு ஏது­வா­கப் பயன்­ப­டுத்­திக்கொள்­ள­வும் முயற்­சிகள் இடம்­பெ­று­கின்­றன.

உள்­ளூர் பண்­ணை­களில் விளை­யும் கீரை உள்ளிட்ட உண­வுப்பொருள்­கள், இறக்­கு­மதி யாகின்ற உண­வுப்பொருள்­க­ளை­விட ஊட்­டச்­சத்து மிக்­க­வை­யா­க­வும் அப்­போ­து­தான் அறு­வடை செய்த புத்­தம்­பு­தி­ய­ன­வா­க­வும் உள்­ளன.

இறக்­கு­ம­தி­யா­கு­ம் உ­ண­வுப்பொருள்­கள் எப்­போ­தும் ஒரே மாதி­ரி­யாக இருப்­ப­தில்லை. அவை விளை­விக்­கப்­படும் இடத்­தின் சூழ்­நி­லை­யைப் பொறுத்து சுவை­யி­லும் சத்­தி­லும் மாறு­படுகின்றன.

அதோடு மட்­டு­மல்ல, பக்­கத்து நாடான மலே­சி­யா­வில் வெள்­ளம், உண­வுப்பொருள் பற்­றாக்­குறை போன்ற நில­வ­ரங்­கள் ஏற்­படும்போது உண­வுப்­பொ­ருள்­கள் வரத்­தும் குறைந்­துவி­டும், விலை­யும் ஏறி­வி­டும்.

இவை எல்­லாம் சிங்­கப்­பூர் எப்­போ­துமே சொந்த உண­வுப்­பெ­ாருள் இருப்பை உறுதிப்­ப­டுத்தி வர­வேண்­டும் என்­பதை நினை­வூட்­டு­பவை.

அத­னால்­தான் நக­ரச்­சூ­ழ­லில் செயல்­படும் நம் பண்­ணை­கள் உற்­பத்­தியை மேலும் பெருக்க வேண்­டும் என்று ஊக்­க­மூட்­டப்­ப­டு­கின்­றன.

இதற்கு அவை தயா­ரா­க­வும் இருக்­கின்­றன. சீரான தேவை இருந்­து­வந்­தால் தாங்­கள் உற்­பத்­தி­யைப் பெருக்க தயார் என்று பண்­ணை­கள் கூறு­கின்­றன. சிங்­கப்­பூர் பண்­ணை­களில் விளை­விக்­கப்­படும் பயி­ருக்கு விடப்­படும் தண்­ணீ­ரு­டன் ஊட்டச்சத்­து­களும் சேர்க்­கப்­ப­டு­கின்­றன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

உள்­ளூ­ரில் விளை­யும் காய்­க­றி­கள் ஊட்­டச்­சத்து மிக்­கவை, பூச்­சிக்­கொல்லி மருந்து தெளிக்­கப்­ப­டா­மல் வளர்க்­கப்­பட்­டவை, சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்­தவை என்­பதை சிங்­கப்­பூ­ரர்­கள் அதி­கம் புரிந்­து­கொண்டு வரு­கி­றார்­கள்.

உள்­ளூர் காய்­க­றி­கள் அப்­போ­து­தான் விளைந்­தவை­யாக இருக்­கும், அவற்­றில் ஊட்­டச்­சத்து அதி­க­மாக இருக்­கும் என்­ப­தால் அவற்­றைப் பார்த்து வாங்­கும் பய­னீட்­டா­ளர்­கள் உள்ளனர்.

ஆனால் உள்­ளூர் காய்­கறி விலை கொஞ்­சம் அதி­கம் என்­ப­து­தான் இதில் உள்ள பிரச்­சினை.

அண்­மை­யில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தாள் 50 பேரை உள்­ள­டக்கி ஓர் ஆய்வை நடத்­தி­யது. தாங்­கள் உள்­ளூர் காய்­க­றியை வாங்கி இருப்­ப­தாக, அவற்றையே வாங்கப்­போ­வ­தா­கக் கூறி­ய­வர்­கள் வெறும் 12 பேர்­தான்.

உள்­ளூர் காய்­க­றியை வாங்­காத இதர 38 பேரில், விலை­தான் முக்­கிய கார­ணம் என்று சொன்­ன­வர்­கள் பாதிப்­பேர்.

பொது­வாக விலை என்­பது புரிந்துகொள்­ளக்­கூ­டிய ஒன்­று­தான். அதேவேளையில், தாங்­கள் உள்­ளூர் காய்­க­றி­களில் செல­வி­டும் கொஞ்­சம் அதிக தொகை, நகர பண்­ணை­க­ளுக்கு அரசு அளிக்­கும் ஊக்­கத்­திற்கு உத­வும் என்பதை சிங்கப்பூரர்கள் நினைத்­துப்­பார்க்க வேண்­டும்.

அதன் மூலம் சுற்­றுச்­சூ­ழ­லுக்­கும் உறு­து­ணை­யாக தாங்­கள் இருக்க இய­லும் என்­ப­தை­யும் அவர்­கள் கவ­னத்­தில் கொள்ளவேண்­டும்.

முடிந்­த­வர்­கள் உள்­ளூர் காய்­க­றி­களை வாங்கி, இங்­குள்ள பண்­ணை­க­ளுக்கு ஊக்­க­மூட்ட வேண்டும். தேவை அதி­கம் இருந்­தால் பண்­ணை­கள் முத­லீட்­டைப் பெருக்­கும் என்­பது திண்­ணம்.

உள்­ளூர் காய்­க­றி­கள் விலை அதி­க­மாக இருப்­ப­தன் தொடர்­பில் சில யோச­னை­கள் முன்­வைக்­கப்­பட்டு உள்­ளன. பண்­ணை­கள் தங்­கள் உற்­பத்­தி­களை நேர­டி­யாக உண­வ­கங்­க­ளுக்கு, உணவு விநி­யோக நிறு­வ­னங்­க­ளுக்கு விற்­கலாம்;

கூட்­டு­றவு அமைப்பு ஒன்றை ஏற்­ப­டுத்தி செயல்­ப­ட­லாம் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்ள அந்த யோச­னை­கள் பரி­சீ­லிக்­கத்­தக்க பயன் உள்­ள­வை­யா­கத் தெரி­கின்­றன.

இவை ஒரு­புறம் இருக்க, பேரங்­கா­டி­கள் தங்­கள் கடை­களில் உள்­ளூர் காய்­கறிகளுக்­காக கண்­ணில் படும்படி தனி இடம் ஒதுக்கி மக்­கள் தேடி அலையாமல் டக்­கென்று பார்த்து உள்­ளூர் காய்­க­றி­களை வாங்க ஊக்­க­மூட்­ட­லாம்.

செலவு கொஞ்­சம் அதி­க­மாக இருந்­தா­லும் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஏற்ற உணவு உற்­பத்­தியை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்ற எண்­ணம் உல­கம் முழு­வ­தும் பய­னீட்­டா­ளர்­க­ளி­டம் அதி­க­மாகி வரு­கிறது. சிங்­கப்­பூ­ரர்­க­ளி­ட­மும் இத்­த­கைய ஓர் எண்­ணம் மேலோங்­கும். உள்­ளூர் ஊட்­டச்­சத்து உண­வுப்­பொருள்களுக்­குத் தேவை கூடும் என்று நம்­பு­வோம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!