சுடச் சுடச் செய்திகள்

உருப்படியான செயல்பாடு

ஊர­டங்­கின்­போது பல­வ­கை­யி­லும் உருப்­ப­டி­யாக பொழு­தைக் கழித்­துள்­ள­னர் திரை­யு­ல­கத்­தி­னர்.

ஊர­டங்கு தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லும் அந்த உருப்­ப­டி­யான செயல்­பா­டு­கள் நீடித்து வரு­கின்­றன. அவற்­றுள் சில ‘உருப்­படி­யான’ விஷ­யங்­க­ளைப் பார்ப்­போம்.

உடற்­ப­யிற்­சி­யின் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து நல்ல முடிவை எடுத்­துள்­ளா­ராம் சாய் தன்­ஷிகா. மேலும் கடும் உண­வுக் கட்­டுப்­பா­டு­க­ளை­யும் பின்­பற்­றப் போகி­றாராம்.

“எந்­த­வொரு செய­லை­யும் தொடர்ந்து 48 நாட்­கள் செய்­தோம் என்­றால் அது நமது பழக்­கங்­களில் ஒன்­றா­கி­வி­டும் என்­பர். முன்­னோர் வார்த்­தை­களை நான் முழு­மை­யாக நம்­பு­கி­றேன்.

“தற்­போது 48 நாட்­கள் தின­மும் அதி­காலை 5 மணிக்கு எழு­வது, தீவிர உடற்­ப­யிற்சி செய்­வது என முடிவு செய்­தி­ருக்­கி­றேன்,” என்­கி­றார் தன்­ஷிகா.

மேலும், உடற்­ப­யிற்­சி­யு­டன் தியா­னத்­தி­லும் ஈடு­பட உள்­ளார். தவிர, உணவுக் கட்­டுப்­பா­டு­ க­ளை­யும் பின்­பற்றப்போகி­றா­ராம்.

“சில ஆண்­டு­க­ளா­கவே இத்­திட்­டம் இருந்து வரு­கிறது. ஆனால் ஒவ்­வொரு முறை­யும் இம்­மு­யற்­சியை பாதி­யி­லேயே கைவிட நேரும். இம்­முறை கடை­சி­வரை முயற்­சிப்­பேன். 48 நாட்­க­ளுக்­குப் பிற­கு­தான் மற்ற விஷ­யங்­கள் குறித்து யோசிக்­கப் போகி­றேன்,” என்­கி­றார் தன்­ஷிகா.

தமிழ், தெலுங்கு என இரு­மொ­ழி­களில் இவ­ரது நடிப்­பில் நான்கு படங்­கள் உரு­வா­கின்­ற­ன­வாம். அது­கு­றித்து மிக விரை­வில் விரி­வான தக­வல்­கள் வெளி­வ­ரு­மாம்.

“இந்­தப் புத்­தாண்­டில் தீவிர உடற்­ப­யிற்­சி­யி­லும் தியா­னத்­தி­லும் ஈடு­ப­டு­வதே நான் செய்­யக்­கூ­டிய உருப்­ப­டி­யான விஷ­யங்­கள்,” என்­கி­றார் தன்­ஷிகா.

*** விஜய் ஆண்­ட­னி­யு­டன் இணைந்து நடித்­துள்ள ‘கோடி­யில் ஒரு­வன்’ பட வெளி­யீட்டை எதிர்­நோக்கி ஆவ­லு­டன் காத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் நடிகை ஆத்­மிகா.

இந்­தப் புத்­தாண்­டின் தொடக்­கத்­தி­லேயே ஒரு நல்ல காரி­யத்­தைச் செய்­தி­ருக்­கி­றா­ராம். ‘கோடி­யில் ஒரு­வன்’ படத்­துக்­காக விஜய் ஆண்­ட­னி­யு­டன் இவ­ரும் ஒரு சண்­டைக்­காட்­சி­யில் நடிக்­க­வேண்டி இருந்­தது. இதில் ஆத்­மி­கா­வுக்­குப் பதி­லாக வேறொ­ரு­வர் ‘டூப்’ போட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில் அக்­காட்­சி­யைத் திரை­யில் கண்­ட­தும் பிர­மித்­துப்போனா­ராம். உட­ன­டி­யாக அந்த சண்­டைக் கலை­ஞ­ரைப் பற்றி விவ­ரம் சேக­ரித்து அவ­ரைத் தொடர்புகொண்­டுள்­ளார்.

“பின்­னர் ஒரு­நாள் நேரின் சந்­தித்­துப் பேசி­னேன். அவ­ரைப் பாராட்­டி­ய­து­டன் என்­னால் முடிந்த ஒரு பரி­சை­யும் அளித்து அவ­ரு­டன் புகைப்­ப­டம் எடுத்­துக்­கொண்­டேன். இனி இது­போன்ற கலை­ஞர்­க­ளின் அர்ப்­ப­ணிப்­பைத் தொடர்ந்து பாராட்டி உற்­சா­கப்­ப­டுத்­து­வது என முடிவு செய்­துள்­ளேன்,” என்­கி­றார் ஆத்­மிகா.

கடந்த இரு­பது ஆண்­டு­க­ளாக உயி­ருக்­குப் போரா­டி­வ­ரும் தனது பட நாய­கன் பாபு­வுக்கு திரை­யு­ல­கத்­தி­னர் உத­வ­வேண்­டும் என கண்­ணீர் கோரிக்கை விடுத்­துள்­ளார் பார­தி­ராஜா.

இவ­ரது இயக்­கத்­தில் உரு­வான ‘என்­னு­யிர் தோழன்’ படத்­தின் நாய­கன்­தான் பாபு. முதல் படத்­தி­லேயே நடிப்­பில் தனி முத்­திரை பதித்த அவ­ருக்கு உட­னுக்­கு­டன் பல வாய்ப்­பு­கள் குவிந்­தன. இரு­பது ஆண்­டு­க­ளுக்கு முன்பு கிட்­டத்­தட்ட 14 படங்­களில் ஒப்­பந்­த­மா­னார். பாபு.

‘மன­சார வாழ்த்­துங்­க­ளேன்’ என்ற படத்­தின் சண்­டைக்­காட்­சி­யில் நடித்­தபோது மாடி­யி­லி­ருந்து கீழே விழுந்­த­தில் முது­கில் படு­கா­ய­ம­டைந்­தார்.தீவிர சிகிச்­சைக்­குப் பிறகு உயிர் பிழைத்­த­போதும் எழுந்து நட­மாட முடி­ய­வில்லை. படுத்த படுக்­கை­யா­கக் கிடப்­ப­வரை அண்­மை­யில் சந்தித்துப் பேசி­யுள்­ளார் பார­தி­ராஜா.

பாபு­வின் நிலை­யைக் கண்டு கண்­க­லங்­கி­ய­தோடு ஒரு காணொ­ளிப் பதி­வை­யும் வெளி­யிட்­டுள்­ளார். சக கலை­ஞர்­கள் பாபு­வுக்கு உத­விக்­க­ரம் நீட்­ட­வேண்­டும் என்று வேண்­டு­கோள் விடுத்­தி­ருப்­ப­து­டன், திரை­யு­ல­கைச் சேர்ந்த பல­ரை­யும் தனிப்­பட்ட வகை­யில் தாமே தொடர்­பு­கொண்டு பேசி வரு­கி­றா­ராம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon