எதற்கும் தயங்காத சமந்தா

தன்­னைப் பற்­றிய கடு­மை­யான விமர்­ச­னங்­களை எதிர்­கொள்ள தாம் தயங்­கி­யதே இல்லை என்­கி­றார் நடிகை சமந்தா.

முன்பு பாது­காப்­பற்ற சூழ்­நி­லை­யில் தாம் இருப்­ப­தாக கரு­திய நிலை மாறி, இப்­போது மனம் முழுக்க தன்­னம்­பிக்கை நிறைந்த பெண்­ணாக மாறி­விட்­ட­தா­க­வும் அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

தமி­ழில் ‘காத்து வாக்­குல ரெண்டு காதல்’, தெலுங்­கில் ‘சகுந்­த­லம்’, இரண்டு இணை­யத் தொடர்­கள் என்று பர­ப­ரப்­பாக இயங்கி வரு­கி­றார் சமந்தா.

அண்­மை­யில் இவர் நடித்து வெளி­யான ‘ஃபேமிலி மேன் 2’ இணை­யத் தொட­ரால் ஏற்­பட்ட சர்ச்சை இவரை சற்றே வருத்­தப்­பட வைத்­துள்­ளது. எனி­னும் தம் மீதான குற்­றச்­சாட்­டு­க­ளுக்­குப் பதில் அளிக்க தாம் எப்­போதுமே தவறி­ய­தில்லை எனச் சுட்­டிக் காட்­டு­கி­றார்.

“ஒரு நடி­கை­யாக எனக்­கென பல பொறுப்­பு­கள் உள்­ளன என்­பதை உணர்ந்­தி­ருக்­கி­றேன். அதி­லும் நீண்ட கால­மாக திரை­யு­ல­கில் நீடிக்­கும் என்­னைப் போன்­ற­வர்­கள், சினிமா என்பது இளை­யர்­களை மனதளவில் மிக எளி­தில் பாதிக்­கச் செய்­யும் என்­பதை அறிந்துள்­ளோம்.

“பொறுப்­பு­டன் செயல்­பட்­ட­தால்­தான் நான் இன்று முன்­னணி நடி­கை­யாக பேசிக்கொண்­டி­ருக்­கி­றேன். பொறுப்­பு­க­ளைத் தவிர்ப்­பதோ சுருக்­கிக்கொள்­வதோ எனக்­குப் பிடிக்­காது. நான் எப்­போ­துமே அவற்­றைச் சுமக்க விரும்­பு­கி­றேன்.

“அது கடி­ன­மான பணி என்­பது நன்கு தெரி­யும். இதன் கார­ண­மாக பல­முறை காயப்­பட்­டி­ருக்­கி­றேன், சோக­ம­டைந்­தி­ருக்­கி­றேன்.

“எனி­னும் இந்­தக் கடி­ன­மான பாதையை விட்டு வில­கி­ய­தில்லை,” என்­கி­றார் சமந்தா.

சமூ­கம், தொழில் சார்ந்த விஷயங்­க­ளுக்­காக குரல் கொடுக்­கும்­போது பொது­வெ­ளி­யில் கடும் எதிர்ப்­பு­களை எதிர்­கொள்ள வேண்டி இருக்­கும் என்று குறிப்­பி­டு­ப­வர், விருப்பு வெறுப்பு எனும் கட்­டங்­க­ளைத் தாம் கடந்து வந்­தி­ருப்­பதை மறக்­க­வில்லை என்­கி­றார்.

“சமூக வலைத்­த­ளங்­களில் சிலர் என்­னைக் கடு­மை­யாக விமர்­சிப்­ப­துண்டு. ஆனால் அதை நான் சாதா­ர­ண­மாக எடுத்­துக்கொண்­ட­தில்லை. அது சாத்­தி­ய­மும் அல்ல. சிறிய விஷ­யம் என்று எதை­யும் கரு­து­வ­தில்லை.

“என்­னால் அத்­த­கைய விவ­கா­ரங்­க­ளைக் கையாள முடி­யும் என்­பதை எனது இத்­தனை ஆண்டு கால அனு­ப­வம் உணர்த்தி உள்­ளது. ஒரு­வேளை மற்­ற­வர்­க­ளுக்கு வேண்­டு­மா­னால் இது சாத்­தி­ய­மற்­றுப் போக­லாம். அப்­ப­டிப்­பட்­ட­வர்­கள் தங்­கள் நண்­பர்­கள், குடும்­பத்­தா­ரின் ஆலோ­ச­னை­யைப் பெற்­றுச் செயல்­பட வேண்­டும்.

“என்­னைப் பற்­றிய எத்­த­கைய சர்ச்­சை­க­ளா­னா­லும் அவை குறித்து விளக்­க­ம­ளிக்­கத் தயா­ராக இருக்­கி­றேன்.

“அனைத்­துக்­கும் என்­னால் உரிய பதில்­களை அளிக்க முடி­யும். நான் அணி­யும் உடை, எனது வேலை, நான் ஈடு­படும் செயல்­கள் என்று எது­கு­றித்­துக் கேள்வி எழுப்­பப்­பட்­டா­லும் பதி­ல­ளிக்க நான் தவ­றி­ய­தில்லை,” என்­கி­றார் சமந்தா.

கதா­நா­ய­கி­களை மையப்­ப­டுத்தி உரு­வா­கும் படங்­களில் தமக்­கும் விருப்­ப­முண்டு என்று குறிப்­பி­டு­ப­வர், அத்­த­கைய படங்­க­ளின் கதை சொல்­லும் போக்கு மாற­வேண்­டும் என்­கி­றார்.

“பெரும்­பா­லான அத்­த­கைய படங்­களில் நாயகி முத­லில் பல­வீ­ன­மாக இருப்­ப­தா­க­வும் அதன்­பி­றகு சூழ்­நிலை நாய­கியை அறவே மாற்றி போராடி வெற்றி பெற வைப்­ப­தா­க­வும் சித்­தி­ரிக்­கப்­ப­டு­கிறது. நான் இதை விரும்­ப­வில்லை. மாறாக, இந்­திய மொழி­களில் சூப்­பர் நாய­கர்­கள் போல் சூப்­பர் நாய­கி­க­ளை­யும் உரு­வாக்க வேண்­டும். பெண்­கள் தொடக்­கம் முதலே பல­சா­லி­க­ளாக சித்­தி­ரிக்­கப்­ப­டு­வதை விரும்­பு­கி­றேன். தென்­னிந்­திய திரை­யு­ல­கம் நிறைய மாறி­விட்­டது. ஒரு­வ­ரை­யொ­ரு­வர் பாராட்­டு­வது, வாய்ப்­பு­க­ளைப் பகிர்ந்துகொள்­வது என்பது ஆரோக்கி­ய­மான விஷயம்.

“‘காத்து வாக்­குல ரெண்டு காதல்’ படத்­தில் விஜய் சேது­பதி, நயன்­தா­ரா­வு­டன் இணைந்து நடிப்­பது மிகுந்த உற்­சா­கத்தை அளிக்­கிறது. படப்­பி­டிப்­பின்­போது கேலி, கிண்­டல், நகைச்­சுவை என பொழு­தைக் கழித்­த­ப­டியே வேலை­யைக் கவ­னிக்­கி­றோம்.

“பிறந்­தது முதல் தமி­ழில் பேசி வளர்ந்­தி­ருக்­கி­றேன். பிற­கு­தான் தெலுங்­கில் பேசக் கற்றுக் கொண்டேன். இன்­னும்­கூட சில தெலுங்கு வார்த்தை­கள் எனக்­குப் புரி­யாது. எனவே, தமி­ழில் நடிக்கும்­ போ­து­தான் நான் இயல்­பாக இருப்­ப­தாக கரு­து­கி­றேன். தமிழ்ப் படங்களே என் மன­துக்கு நெருக்­க­மாக இருப்­ப­தா­க­வும் உணர்­கி­றேன்,” என்­கி­றார் சமந்தா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!