‘காதல் கதைகள் பிடிக்கும்’

காதல், குடும்­பக் கதை­கள் என்­றால் தமக்கு மிக­வும் பிடிக்­கும் என்­கி­றார் அதிதி ராவ்.

அத்­த­கைய கதை­களில் அமை­யும் தமக்­கான கதா­பாத்­தி­ரங்­களில் அனு­ப­வித்து நடிக்க இய­லும் என்று அண்­மைய பேட்­டி­யில் தெரி­வித்­துள்­ளார்.

அதிதி நடிப்­பில் அண்­மை­யில் வெளி­யான படம் 'ஹே சினா­மிகா'. அதில் அவ­ரும் துல்­கர் சல்­மா­னும் இணைந்து நடித்­துள்­ள­னர்.

"பொது­வாக இரு­வ­ருக்கு இடை­யி­லான உறவு குறித்து விவ­ரிக்­கும் விவா­திக்­கும் கதை­களில் கன­மான கதா­பாத்­தி­ரங்­கள் அமை­யும். எனவே, நமது நடிப்­புத் திற­மையை முழு­மை­யாக வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்பு கிடைக்­கும்.

"பிருந்தா மாஸ்­டர் இயக்­கிய 'ஹே சினா­மிகா' படம் அப்­ப­டிப்­பட்ட அனு­ப­வத்­தைத்­தான் எனக்­குத் தந்­தது. பொது­வாக நெருக்­க­மான உற­வு­கள் குறித்து விவ­ரிக்­கும் கதை­களில் பல்­வேறு திருப்­பங்­கள் இருக்­கும்.

"குறிப்­பாக, காதல் கதை­களில் இத்­த­கைய திருப்­பங்­கள் இடம்­பெ­றும்­போது கதை­யின் ஓட்­டம் சுவா­ர­சி­ய­மாக இருக்­கும். இப்­போ­தெல்­லாம் காதல் கதை­களை திரை­யில் வெவ்­வேறு கோணங்­களில் கையாள்­கி­றார்­கள்.

"இனி எந்­த­வொரு காதல் படத்­தை­யும் முன்பு வெளி­யீடு கண்ட படத்­து­டன் ஒப்­பிட்டு 'ஒரே மாதி­ரி­யாக இருக்­கிறது' என்று யாரும் விமர்­சிக்க முடி­யாது. கார­ணம், இன்­றுள்ள எழுத்­தா­ளர்­கள் மிக சாதுர்­ய­மாக கதை, திரைக்­க­தையை எழு­து­கி­றார்­கள்," என்­கி­றார் அதிதி.

இந்­திப் படங்­களில் மட்­டுமே அதிக கவ­னம் செலுத்­து­வ­தா­கக் கூறப்­ப­டு­வது சரி­யல்ல என்று குறிப்­பி­டு­ப­வர், நல்ல கதை­கள் மட்­டுமே தமக்­குத் தேவை என்­கி­றார். தனக்­கேற்ற கதா­பாத்­தி­ரங்­கள் அமைந்­தால் வெளி­நாட்டு மொழி­களில் நடிக்­க­வும் தயா­ராக உள்­ளா­ராம்.

"பிரெஞ்சு, ஸ்பா­னிய மொழிப் படங்­களில் நடிப்­ப­தற்­கும்­கூட நான் தயார். அண்­மைக்­கா­ல­மாக அம்­மொ­ழி­களில் சிறந்த படைப்­பு­கள் உரு­வா­கின்­றன. நான் தமிழ், தெலுங்கு, இந்தி என்­றெல்­லாம் பார்ப்­ப­தில்லை. நல்ல கதா­பாத்­தி­ரங்­களே நான் எந்­தப் படத்­தில் நடிக்­கி­றேன் என்­பதை தீர்­மா­னிக்­கின்­றன," என்­கி­றார் அதிதி.

கொரோனா நெருக்­கடி கார­ண­மாக இவர் நடிக்க ஒப்­புக்­கொண்ட சில படங்­கள் முடங்­கிப் போய்­விட்­ட­ன­வாம். குறிப்­பாக, தனுஷ் இயக்­கத்­தில் நடிக்க ஒப்­புக்­கொண்ட படத்­தின் நிலைமை என்­ன­வா­னது எனத் தெரி­ய­வில்லை என்று வருந்­து­கி­றார்.

"அந்­தப் படத்­தில் எனக்­கு­ரிய காட்­சி­களில் முழு­மை­யாக நடித்து முடித்­து­விட்­டேன். படம் மிகச்­சி­றப்­பான முறை­யில் வளர்ந்து வந்­தது. ஆனால், இப்­போது என்ன நடக்­கிறது என்­றும் படம் எந்த நிலை­யில் உள்­ளது என்­றும் தெரி­ய­வில்லை.

"ஊட­கங்­கள் மூல­மா­கத்­தான் அவ்­வப்­போது சில தக­வல்­க­ளைக் கேள்­விப்­ப­டு­கி­றேன். நாம் நடிக்­கும் படத்­துக்கு இப்­ப­டிப்­பட்ட நிலைமை ஏற்­ப­டும்­போது மனம் வருந்­து­கிறது," என்­கி­றார் அதிதி.

வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளங்­கள் அமைந்­தால் கால்­ஷீட் ஒதுக்­கு­வ­தி­லும் சம்­பள விஷ­யத்­தி­லும் விட்­டுக்­கொ­டுக்க தயா­ராக இருப்­ப­தாக குறிப்­பி­டு­ப­வர், ரசி­கர்­க­ளுக்கு தனது நடிப்பு போர­டிக்­கும் முன்பே திரை­யு­ல­கில் இருந்து வில­கி­விட வேண்­டும் என்­பதே தமது திட்­டம் என்­கி­றார்.

"ரசி­கர்­க­ளுக்­குப் பிடிக்­க­வில்லை என்­றால் அதன் பிறகு திரை­யு­ல­கில் நீடிப்­ப­தில் அர்த்­த­மில்லை. நல்ல வேளை­யாக இது­வரை அவ்­வாறு நடக்­க­வில்லை.

"எனக்­கும் அப்­ப­டி­யோர் எண்­ணம் ஏற்­ப­ட­வில்லை. எனவே, எனது திரைப்­ப­ய­ணம் எந்­த­வித விமர்­ச­னத்­துக்­கும் ஆட்­ப­டா­மல் தொடர்ந்து கொண்­டி­ருக்­கிறது," என்­கி­றார் அதிதி ராவ்.

தற்­போது இந்­தி­யில் இரண்டு படங்­களில் நடிக்க ஒப்­பந்­த­மாகி இருப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், தமி­ழில் புதுப்­ப­டம் ஒன்­றில் நடிப்­பது தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடக்­கிறது என்­கி­றார்.

இந்­தி­யில் கதா­நா­ய­கி­கள் சம்­ப­ளத்தை உயர்த்­து­வ­தில் மட்­டுமே கவ­னம் செலுத்­தும் நிலை­யில், அதி­தியோ, கதா­பாத்­தி­ரங்­க­ளைத் தேர்வு செய்­வ­தில் மட்­டுமே கறா­ராக இருப்­ப­தாக விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

இதை­விட சிறந்த பாராட்டு தமக்­குக் கிடைக்­காது என்று பூரித்­துப்­போ­கி­றார் அதிதி ராவ்.

"கலை­ஞர்­க­ளுக்கு இத்­த­கைய பாராட்­டு­கள் தான் உற்­சா­கம் தரும். கூடு­தல் சம்­ப­ளம், விரு­து­கள் என்­பன எல்­லாம் இரண்­டாம் பட்­சம்­தான். நான் இது­போன்ற பாராட்­டு­களை நேசிக்­கி­றேன்," என்­கி­றார் அதிதி ராவ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!