மக்களை மகிழ்விக்க வரும் புதிய படங்கள்

பாலகிருஷ்ணன் ஹரிபிரியா

விடுமுறைக் காலம் வந்துவிட்டது. பலர் திரையரங்குகளில் புதிய படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவ்வாறு விரைவில் வெளிவரவுள்ள படங்களைப் பற்றி தொகுத்து வழங்குகிறது இப்பகுதி.

துருவ நட்சத்திரம் 

‘இந்தப் படம் எப்போது வரும்’ என்ற கேள்வியைத்தான் பலரும் முணுமுணுத்துகொண்டிருந்தனர். இறுதியில், இவ்வாண்டு நவம்பர் 24ஆம் தேதியன்று படம் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

கௌதம் மேனன் தயாரித்து, இயக்கியுள்ள ‘துருவ நட்சத்திரம்’, உளவாளியாக இயங்கும் ‘ஜான்’ என்பவரைப் பற்றியது. சட்ட ஒழுங்குக்குக் கட்டுப்படாமல் பயங்கரவாத அமைப்புகளை ரகசியமாக வீழ்த்துவதே ஜான் தலைமையில் இயங்கும் குழுவின் இலக்காகும்.

விறுவிறுப்பான அதிரடிப் படமாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

அயலான்

அயலான் படம் மாறுபட்டிருக்கும் என்று மக்களிடையே எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. படம்: இணையம்

தமிழ்த் திரையுலகில் ‘அயலான்’ ஒரு மாறுபட்ட முயற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள இப்படம், 2024ஆம் ஆண்டு ஜனவரியில் பொங்கலுக்குத் திரைகாணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேற்றுக்கிரகவாசி தொடர்பான காட்சிகள் படத்தில் இடம்பெறுவது புதுமையாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் கூறுகின்றனர்.

குழந்தைகளைக் கவரும் படமாக இது இருக்கும் என்றும் பலர் எதிர்பார்த்துள்ளனர்.

டி50

தனுஷ் நடிப்பில் ‘டி50’. படம்: இணையம்

தனுஷ் நடித்து இயக்கி உள்ள படம், ‘டி50’. குண்டர் கும்பல்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பழிவாங்கும் கதைக்கரு என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்காக தனுஷ் தனது தோற்றத்தை மாற்றி மொட்டைத் தலையுடன் மிரட்டலாக வலம் வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் மில்லர் 

தனுஷ் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கும் படம் இது. படம்: இணையம்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. டிசம்பர் 15ஆம் தேதியன்று திரைகாண உள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் வெளியிடப்படவுள்ளது.

வரலாற்றுப் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மூன்று விதமான தோற்றங்களில் தனுஷ் வலம் வரவுள்ளதாகவும் இரண்டாம் பாதியில் போர்க் காட்சிகள் இருக்கும் என்றும் இயக்குநர் கூறியுள்ளார்.

மிரட்டலான காட்சிகளை மக்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சலார்

பிரபாஸ் நடிப்பில் வெளிவரவுள்ள சலார். படம்: இணையம்

‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம், ‘சலார்’. இந்தப் படமும் வசூல் ரீதியில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகுபலிக்குப் பிறகு தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் பிரபாஸ், சலார் படம் தூக்கிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். வில்லனாக பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

குண்டர் கும்பல் தலைவர் உயிரிழக்கும் தம் நண்பனுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற முயல்வதாகக் கதைக்கரு அமைந்திருக்கும்.

மேரி கிறிஸ்துமஸ்

டிசம்பரில் வெளிவரவுள்ள ‘மேரி கிறிஸ்துமஸ்’. படம்: இணையம்

திகில் நிறைந்த கதைக்களத்தைக் கொண்டது ‘மேரி கிறிஸ்துமஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் பாலிவுட் பிரபலம் கத்ரீனா கைஃபும் நடித்துள்ளார். இந்தப் படம் டிசம்பரில் வெளியீடு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனித்துவமான சினிமா அனுபவத்தை இப்படம் வழங்கும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர். தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகும் இப்படத்தைக் காண மக்கள் பேராவலுடன் காத்திருக்கின்றனர்.

     

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!