கவலையிருந்தாலும் கட்டுப்பாட்டை வரவேற்கும் உறவினர்கள்

முதி­ய­வர்­களை அதி­க­ள­வில் பாதித்து வரும் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைக் கருதி, இம்­மா­தம் 30ஆம் தேதி வரை சிங்­கப்­பூ­ரி­லுள்ள தாதிமை இல்­லங்­க­ளுக்­குச் செல்ல வரு­கை­யா­ளர்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால், தாதிமை இல்­லங்­களில் வசிக்­கும் நெருங்­கிய உற­வி­னர்­க­ளைக் குடும்­பத்­தி­னர் சந்­திக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

வழக்­க­மாக வாரத்­திற்கு இரண்டு முறை ஈசூ­னில் உள்ள ஸ்ரீ நாரா­யண மி‌‌ஷன் தாதிமை இல்­லத்­தில் தமது பெரி­யம்­மா­வான 96 வயது திரு­வாட்டி ஃபிலிப் ஜெயாவை காணச் செல்­லும் திரு­வாட்டி ஜூலி ஃபிலிப்ஸ், இம்­மாத இறுதி வரை பெரி­யம்­மா­வைப் பார்க்க முடி­யாது என்று தகவல் தெரி­விக்­கப்­பட்­ட­தும் அழுது­விட்­டார்.

கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக ஸ்ரீ நாரா­யண மிஷன் இல்­லத்­தில் தங்­கி­யி­ருக்­கும் திரு­வாட்டி ஃபிலிப்பை திரு­வாட்டி ஜூலி­யும் அவ­ரது இரண்டு பிள்­ளை­களும் அடிக்­கடி சென்று சந்­திந்து வந்­த­னர்.

“என் சொந்த பாட்­டி­யை­விட என் பெரி­யம்­மா­வு­டன்­தான் எனக்கு நெருக்­கம் அதி­கம். ‘அம்­மாச்சி’ என்று அவரை செல்­ல­மாக அழைப்­பேன். கோழிக் கறி, நண்டு, மீன் வறு­வல் என தமக்­குப் பிடித்­த­மான உணவு வகை­யைச் சமைத்து இல்­லத்­திற்கு எடுத்து வரச் சொல்­வார்.

“புது சட்டை, முக ஒப்­பனை உள்­ளிட்ட பொருட்­க­ளை­யும் அடிக்­கடி வாங்கி வரச் சொல்­வார். அவ­ருக்­கென்று யாரு­மில்லை,” என்று கூறிய 44 வயது ஜூலி, தம்­மைப் பார்க்­கா­மல் பெரி­யம்மா ஏங்கி விடு­வார் என்று வருத்­தப்­பட்­டார்.

எனி­னும், இல்­ல­வா­சி­கள் தொடர்ந்து உற­வி­னர்­க­ளு­டன் தொடர்­பு­கொள்ள வாட்ஸ்­அப் காணொளி அழைப்பு வச­தி­களை ஸ்ரீ நாரா­யண மிஷன் இல்­லம் ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தது, அவ­ருக்­குக் கவ­லை­யைக் குறைத்­தது என்­றார் ஜூலி.

“எப்­போ­தும்­போல, அன்­றா­டம் தொலை­பே­சி­யில் அழைத்து பெரி­யம்­மா­வு­டன் பேசி வரு­கி­றேன். வாட்ஸ்­அப் காணொளி மூலம் அவ­ரைப் பார்த்­துப் பேச முடி­வது நிம்­மதி தரு­கிறது. நன்கு யோசித்­துப் பார்த்­தால், முதி­யோர் இல்­லத்­திற்­குச் செல்­வ­தற்­கான தடை ஒரு மாத காலம்­தானே. இது­வும் வேக­மாக கடந்­துச் சென்­று­வி­டும். விரை­வில் அவ­ரைச் சந்­திக்க முடி­யும்,” என்­றார் ஜூலி.

ஜூலி­யைப் போலவே, ஸ்ரீ நாரா­யண மிஷன் இல்­லத்­தில் தங்­கி­யி­ருக்­கும் தமது தாயாரை வாரத்­திற்கு நான்கு முறை காணச் செல்­வார் திரு­மதி சுப்­பம்­மாள் சிவ­சாமி, 64.

87 வய­தா­கும் கைநிச்சி ஐளு என்ற அவ­ரின் தாயார் ஒராண்­டுக்­கும் மேலாக ஸ்ரீ நாரா­யண மிஷன் இல்­லத்­தில் வசித்து வரு­கி­றார்.

“நோயின் கார­ணத்­தால் என் தாயார் அதி­கம் பேச­மாட்­டார், இருப்­பி­னும் அவ­ரைப் பார்த்து, நலம் விசா­ரித்து வரு­வது என் வழக்­கம்,” என்­றார் சுப்­பம்­மாள்.

“வரு­கை­யா­ளர்­க­ளுக்­கான இந்­தத் தடையை நான் வர­வேற்­கி­றேன். இந்த நேரத்­தில் பாது­காப்புதான் முக்­கி­யம். கொரோனா கிரு­மித்­தொற்­றால் வய­தா­ன­வர்­களுக்கு ஆபத்து அதி­கம். யாருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருக்­கிறது என்­பதை உறு­தி­யா­க­யும் கணிக்க முடி­யாது. இந்த நிலை­யில் சந்­திப்­பு­க­ளைத் தவிர்ப்­பதே நல்­லது,” என்­றார் சுப்­பம்­மாள்.

இந்­நி­லையில், இல்­லத்­தைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளுக்­குத் தேவை­யான தங்­கும் வச­தி­க­ளை­யும் பாது­காப்­பான போக்­கு­வ­ரத்து ஏற்­பா­டு­க­ளை­யும் செய்து வரு­வ­தாக ஸ்ரீ நாரா­யண மிஷன் இல்­லத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி எஸ்.தேவேந்­தி­ரன் கூறி­னார்.

“இல்­ல­வா­சி­கள் உட்­பட தாதிமை இல்ல ஊழி­யர்­க­ளின் உடல்­ந­லத்­தைப் பேணு­வ­தும் முக்­கி­யம். இல்­ல­வா­சி­க­ளைப் பரா­ம­ரிக்­கும் பொறுப்­பில் இருக்­கும் இவர்­கள் பாது­காப்­பாக இருப்­ப­தும் அவ­சி­யம். நிர்­வாக சேவை­யில் பணி­பு­ரி­யும் பல ஊழி­யர்­கள் வீட்­டி­லி­ருந்தே வேலை பார்க்க சொல்லி­விட்­டோம்.

“முன்­னிலை ஊழி­யர்­கள் பல­ரும் இல்­லத்­தில் அமைந்­தி­ருக்­கும் தங்­கும் விடு­தி­யில் வசித்து வரு­கி­றார்­கள்.

“தாதிமை இல்­லத்­தி­லி­ருந்து தொலை­தூ­ரத்­தில் தங்­கும் ஊழி­யர்­க­ளுக்­குச் சிறப்பு போக்­கு­வ­ரத்து ஏற்­பா­டு­க­ளை­யும் செய்­துள்­ளேம்,” என்று திரு தேவேந்­தி­ரன் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!