தமிழ், சமஸ்கிருதம் இரண்டின் உறவாடலை விளக்கிய அறிஞர்

பண்­டைய காலம் முதல் தமிழ் மொழிக்­கும் சமஸ்­கி­ரு­தத்­திற்­கும் உள்ள உறவு, உர­சல், இரு மொழி­களும் தோன்­றிய விதம், வளர்ச்சி போன்ற பல அம்­சங்­க­ளைக் குறித்த தெளி­வு­ரையை வழங்­கி­னார் இரு மொழி­க­ளி­லும் ஆழ­மான தேர்ச்சி பெற்ற பேரா­சி­ரி­யர் ஜியார்ஜ் ஹார்ட்.

சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மையம், தேசிய நூலக வாரி­யத்­துடன் இணைந்து 'தமி­ழும் சமஸ்­கி­ரு­த­மும்: சிவ­னின் இரு கண்­கள்' எனும் மெய்­நி­கர் நிகழ்ச்­சிக்கு சென்ற மாதம் 31ஆம் தேதி ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

'ஸூம்' இணைப்பு வழி­யா­கக் கிட்­டத்­தட்ட 500 பேர் கலந்­து­கொண்ட நிகழ்ச்­சி­யில் அமெ­ரிக்­கா­வின் ஃபுளோரிடா மாநி­லத்­தில் இ­ருந்து சிறப்­புரை ஆற்­றி­னார் திரு ஹார்ட். சிங்­கப்­பூர் உட்­பட மலே­சியா, இந்­தியா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­களும் நிகழ்­வில் இணைந்­த­னர்.

தமி­ழின் பெரு­மை­க­ளைப் பற்றி பல சுவா­ர­சி­ய­மான வர­லாற்­றுத் துணுக்­கு­களை எடுத்­து­ரைத்த பேரா­சி­ரி­யர் ஹார்ட், சமஸ்­கி­ரு­தத்­து­டன் தமிழை ஒப்­பிட்­டும் பேசி­னார்.

சிகாகோ பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்­த­வ­ரும் பல மொழி­க­ளின் அறி­ஞ­ரு­மான பேரா­சி­ரி­யர் ஏ.கே. ராமா­னு­ஜத்­தி­டம் தமிழ் கற்­ற­வர் பேரா­சி­ரி­யர் ஹார்ட்.

பெர்க்லி, கலி­ஃபோர்­னியா பல்­கலைக்­க­ழ­கத்­தில் பணி­யாற்­றிய திரு ஹார்ட், 2000ஆம் ஆண்டு இந்­திய அர­சுக்கு எழு­திய கடி­தம் தமிழ்­மொ­ழி­யைச் செம்­மொ­ழி­யா­கப் பிர­க­ட­னப்­ப­டுத்த முக்­கி­யப் பங்­காற்­றி­யது. இரு மொழி­க­ளை­யும் பற்றி ஆழ­மாக ஆய்வு செய்து கட்­டு­ரை­யை­யும் எழு­தி­யுள்­ளார்.

"தமிழ் சிங்­கப்­பூ­ரில் இன்று ஓர் ஆட்­சி­மொழி. சமஸ்­கி­ரு­தம் தென்­கி­ழக்­கா­சி­யா­வில் பண்­டைக்­கா­லத்­தில் பர­வ­லாக ஊடு­ரு­விய மொழி; இந்­தி­யா­வில் ஆயி­ர­மா­யி­ரம் ஆண்­டு­க­ளா­கத் தமி­ழோடு ஒட்டி உற­வா­டிய மொழி. எனவே, இவ்­விரு மொழி­க­ளைப் பற்­றிய சரி­யான புரி­தல் நமக்­குத் தேவை," என்று சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மைய இயக்­கு­நர் திரு அருண் மகிழ்­நன் தெரி­வித்­தார்.

"இந்­திய கலா­சா­ரத்­தின் அடிப்­படை­யாக இந்த இரு மொழி­களும் விளங்­கி­வ­ரு­வதை இவ­ரது பேச்சு வலி­யு­றுத்­தி­யது. இரு மொழி­க­ளை­யும் இவர் ஆழ­மா­கப் படித்­துள்­ள­தால் இவர் தரும் விளக்­கங்­கள், விழிப்­பு­ணர்­வைத் தரும் என்­பது என் நம்­பிக்கை," என்று கூறி­னார் பேரா­சி­ரி­யர் ஹார்ட்­டு­டன் சுமார் 40 ஆண்­டு­கள் தொடர்­பில் இருக்­கும் திரு சுப்­பையா லெட்­சு­ம­ணன்.

செய்தி: இர்­ஷாத் முஹம்­மது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!