கொரோனா: இந்தியாவில் மேலும் இருவருக்கு கிருமித் தொற்று

கோப்புப்படம்

இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என இந்திய அரசு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் தலைநகர் ஊஹானில் கொரோனா கிருமித் தொற்று கண்டறியப்பட்டது. ஊஹானில் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா கிருமித் தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா கிருமித் தொற்று தாக்குதலுக்கு பலி எண்ணிக்கை 2,912 ஆக உயர்ந்து உள்ளது.

சீனாவிலுள்ள ஊஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் கேரள மாணவி ஒருவரை கடந்த ஜனவரி 29ந்தேதி இந்த வைரஸ் தாக்கியுள்ளது. சீனாவில் இருந்து நாடு திரும்பிய அவர் திருச்சூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதேபோன்று ஊஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் மற்றொரு மாணவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் கேரளாவில் உள்ள ஆலப்புழா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து, கேரளாவில் 3வது நபருக்கும் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. காசர்கோடு பகுதியை சேர்ந்த அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். தொடர்ந்து 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட உடன் கேரள அரசு அதனை மாநில பேரிடர் என அறிவித்தது.

இதன்பின்பு தீவிர சிகிச்சைக்கு பின்னர் 3 பேருக்கும் பாதிப்பு குறைந்தது. சிகிச்சை முடிந்து அவர்கள் வீடு திரும்பினர். கேரள அரசும் மாநில பேரிடர் அறிவிப்பினை தளர்த்தியது.

இந்நிலையில், இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இத்தாலியில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து தெலுங்கானா வந்த ஒருவருக்கும் என 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!