இந்தியா சென்ற பயணிகளிடம் 11 கொவிட்-19 ஓமிக்ரான் துணைத் திரிபுகள் கண்டறியப்பட்டன

டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ஆம் தேதிவரை இந்தியாவுக்கு வந்த அனைத்துலகப் பயணிகளிடையே மொத்தம் 11 ஓமிக்ரான் துணைத் திரிபுகள் (subvariants) கண்டறியப்பட்டன. புதிய, ஏற்கெனவே உள்ள துணைத் திரிபுகளின் கலப்பு அவை.

கொவிட்-19 ஓமிக்ரான் வகை திரிபுகளின் துணைவழியை (sublineages) சேர்ந்தவை அவை. பிஏ.5.2 துணைத் திரிபும் பிஎஃப்.7 துணைத் திரிபின் துணைவழி கிருமியும் அவற்றில் அடங்கும்.

உலகளவில் நூற்றுக்கணக்கான கொவிட்-19 திரிபுகள் தற்போது வலம் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் சிலவகை கிருமிகளின் பரவல் மட்டுமே கண்காணிக்கப்படுகின்றன.

டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ஆம் தேதிவரை கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 19,227 பயணிகளில் 124 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக இதுபற்றி தகவல் அறிந்த தரப்பு தெரிவிக்கிறது.

சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு 'கொவிட்-19 தொற்று இல்லை' எனும் பரிசோதனை முடிவு காட்டுவதை இந்திய அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!