சிங்கப்பூரில் அரையாண்டு பள்ளி விடுமுறை மே 5ஆம் தேதி தொடங்கும்

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றை முறியடிப்பதற்கான திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ள வேளையில், அரையாண்டு பள்ளி விடுமுறை முன்னதாகக் கொண்டு வரப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றை முறியடிப்பதற்கான திட்டம் ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள வேளையில், அரையாண்டு பள்ளி விடுமுறை மே 5ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் அறிவித்துள்ளார்.

“ஜூன் 1ஆம் தேதிக்குள் நிலவரம் மேம்படும் என நாங்கள் நம்புகிறோம். அப்போது பள்ளிகள் திறக்கப்படுவதை நாம் எதிர்பார்க்கலாம்,” என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் இன்று (ஏப்ரல் 21) பதிவிட்டார்.

“அப்படியென்றால், மூன்றாவது கல்விப் பருவம் (Term 3) நீளமாக இருக்கும். எனவே, அந்தப் பருவத்தின் நடுப்பகுதியில் ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்படும். ஜூலை 20 முதல் 26ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும்.

“மூன்றாவது கல்விப் பருவம் 7 வாரங்கள், ஒரு வார விடுமுறை, 6 வாரங்கள் என வகைப்படுத்தப்படும். அந்த ஒரு வாரகால விடுமுறைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் பாடங்களை மறுஆய்வு செய்வர் அல்லது திட்டமிடுவர்,” என்று திரு ஓங் விவரித்தார்.

ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படுவதால், பாடத்திட்டத்தில் கற்பித்தல் நேரம் குறையும் எனக் கூறிய அவர், தற்போதைய நிலவரப்படி வகுப்பறையில் பாடங்கள் கற்பிக்கப்படும் வேகத்தைவிட வீட்டிலிருந்து கற்கும் முறை மெதுவாக இருப்பதைச் சுட்டினார்.

“எனவே, கல்வியாண்டு இறுதியில் அனைத்துப் பள்ளிகளிலும் பொதுவாக சொல்லித் தரப்படும் குறிப்பிட்ட பாடங்கள் தேர்வில் சேர்க்கப்பட மாட்டா,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஏற்பாடு, பாடத்திட்டத்தின் சுமையைக் குறைக்க உதவுவதோடு ஆசிரியர்களும் மாணவர்களும் பாடத்திட்டத்திற்கு ஈடுகொடுக்கும் வேலைப் பளுவைக் குறைக்கும் என்றார் அவர்.

“குறிப்பிட்ட பாடங்கள் முடிந்தவரை கற்பிக்கப்படும். எனினும், தேசிய தேர்வுகளில் அந்தப் பாடங்கள் குறித்த கேள்விகள் கேட்கப்பட மாட்டா,” என்று அவர் சொன்னார்.

கல்வி
பள்ளிகள்
தேர்வு
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!