அமைச்சர்: உயர் வடிகட்டும் திறனுடைய முகக்கவசம் அணிக

முகக்கவசப் பயன்பாடு குறித்த வழிகாட்டலை சுகாதார அமைச்சு இன்று புதுப்பித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உயர் வடிகட்டுதல் திறன் கொண்ட முகக்கவசங்களை அணியுமாறும், இந்த “முக்கியமான காலகட்டத்தில்” கொவிட்-19 பரவலைக் குறைக்க வீட்டிலேயே இருக்குமாறும் சிங்கப்பூர் மக்களை நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக மக்கள் அருகில் இருக்கக்கூடிய மூடப்பட்ட (enclosed) இடங்களுக்குச் செல்லும்போது அதிக வடிகட்டுதல் திறன் கொண்ட முகக்கவசம் அணிவது அவசியம். ​​மருத்துவ முகக்கவசம் அல்லது வடிகட்டி இணைக்கப்பட்டது போன்றவை அதிக

வடிகட்டுதல் திறன் கொண்டவை. வெறுமனே துணியினால் ஆன முகக்கவசத்திற்கு இத்தகைய திறன் இல்லை என்றார் அவர்.

பல்வேறு உருமாற்ற கொவிட்-19 கிருமிகள் எவ்வாறு பரவக்கூடியவை, அவை காற்றுத்துகள் மூலம் எவ்வாறு பரவுகின்றன என்பதை அண்மைய சான்றுகள் காட்டுவதால் தகுந்த முகக்கவசத்தைப் பயன்படுத்துவது முக்கியம் என்றார் திரு வோங்.

கொவிட்-19 பரவலைக் கையாளும் அமைச்சுநிலை பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு வோங், இன்று (மே 18) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தகுந்த முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கினார்.

முகக்கவசம்
கொவிட்-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!