சிங்கப்பூரில் இரண்டாவது தடுப்பூசியைப் போடும் காலம் 6 முதல் 8 வாரங்களாக தள்ளிவைப்பு

சிங்கப்பூரில் நாளை (மே 19) முதல் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவுசெய்பவர்களுக்கு முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு ஆறு முதல் எட்டு வாரங்கள் கழித்த பிறகே இரண்டாவது தடுப்பூசி போடப்படும்.

இந்த அறிவிப்புக்கு இணங்க, தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டம் 40 முதல் 44 வயது பிரிவினருக்கு நாளை (மே 19) முதல் விரிவுபடுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இன்று (மே 18) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 12 முதல் 15 வயது பிரிவினருக்கும் தடுப்பூசித் திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு அறிவித்துள்ளது.

மக்களுக்குத் தடுப்பூசி போடும் உத்தியில் இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம், எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் கூடுதலாக 400,000க்கும் அதிகமானோருக்கு குறைந்தது ஒரு தடுப்பூசியாசியாவது போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது செயல்படுத்தப்பட்டால் ஆகஸ்ட் மாத தொடக்கத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெறும் சிங்கப்பூர்வாசிகள் அனைவருக்கும் குறைந்தது ஒரு தடுப்பூசியாசியாவது போட முடியும் என்று அமைச்சர் ஓங் கூறினார்.

“அனைத்தும் சுமூகமாக நடந்தேறினால், ஆகஸ்ட் மாதத்திற்குள் 4.7 மில்லியன் பேருக்கு குறைந்தது ஒரு தடுப்பூசியாவது போட முடியும். தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெறும் மக்கள்தொகையில் பெரும்பகுதியினரை இது குறிக்கிறது,” என்று அவர் விளக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!