12 முதல் 39 வயது வரை 73,000 பேர் தடுப்பூசிக்கு முன்பதிவு

சிங்­கப்­பூ­ரில் 12-39 வய­துக்கு உட்­பட்ட 73,000 பேர் கொவிட் -19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முன்­ப­திவு செய்­து­விட்­ட­னர். இது, சிங்­கப்­பூர் தனது தடுப்­பூசி போடும் திட்­டத்தை மற்ற வய­தி­ன­ருக்­கும் விரி­வு­ப­டுத்­திய முதல் நாளான நேற்று நண்­ப­கல் வரைக்­கு­மான நில­வ­ரம்.

இந்த வய­து­வ­ரம்­பில் உள்­ள­வர்­களில் மொத்­தம் 100,000 பேருக்கு தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள குறுஞ்­செய்தி மூலம் அழைப்பு விடுக்­கப்­பட்­டது என்­றும் அதில் நான்­கில் மூன்று பேர் தடுப்­பூசி போட முன்­ப­திவு செய்­து­கொண்­ட­னர் என்­றும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

மேலும், தடுப்­பூசி போடு­வ­தற்­கான இடங்­கள் அதி­க­ரிக்­கப்­ப­டும்­போது கூடு­த­லான குறுஞ்­செய்தி அழைப்­பு­கள் விடுக்­கப்­படும் என்று அமைச்சு கூறி­யது.

சிங்­கப்­பூ­ர­ரில் 12-39 வய­துக்கு உட்­பட்­டோர் மிகப் பெரிய எண்­ணிக்­கை­யில், கிட்­டத்­தட்ட 1.5 மில்­லி­யன் பேர் உள்­ள­னர்.

அத­னால் தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்ள முன்­ப­திவு செய்­வ­தற்கு அவர்­க­ளுக்கு இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்று சுகா­தார் அமைச்­சர் ஓங் யீ காங் கூறி­யி­ருந்­தார்.

மேலும் மொடர்னா தடுப்­பூ­சி­யைத் தெரிவு செய்­வோர் முன்­கூட்­டியே அத­னைப் போட்­டுக்­கொள்­ள­லாம் என்­றும் ஒப்­பு­நோக்க ஃபைசர்- பயோஎன்­டெக் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள கால­தா­ம­தம் ஆக­லாம் என்­றும் அவர் கூறி­னார்.

பன்­னி­ரண்டு முதல் 15 வய­துக்கு உட­பட்­டோ­ருக்கு ஃபைசர் தடுப்­பூசி மட்­டுமே போட முடி­யும் என்­ப­தால் இந்­நிலை என்று வியா­ழக்­கி­ழமை நடந்த அனைத்து அமைச்சு நிலை செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் திரு ஓங் கூறி­யி­ருந்­தார்.

அத­னைத் தவிர கடந்த புதன்­கி­ழமை நில­வ­ரப்­படி 4.4 மில்லியன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டன என்­றும் 2.5 மில்­லி­யன் பேர் குறைந்­தது ஒரு முறை கொவிட்-19 தடுப்­பூசி பெற்­றுள்­ள­னர் என்­றும் கூறப்பட்டது. இது சிங்­கப்­பூர் மக்­கள் தொகை­யில் சுமார் 44% ஆகும்.

தடுப்பூசி
முன்பதிவு
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!