நாளை முதல் மேலும் தளர்வுகள்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 26) முதல் கொவிட்-19 கட்டுப்பாடுகள் பெரிய அளவில் தளர்த்தப்படுகின்றன. கோப்புப் படம்: திமத்தி டேவிட்

சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 26) முதல் கொவிட்-19 கட்டுப்பாடுகள் பெரிய அளவில் தளர்த்தப்படுகின்றன.

நாளை தளர்த்தப்படும் கட்டுப்பாடுகளில் சில:

நாளை முதல் முகக்கவசம் அணியும் தேவையுள்ள நடவடிக்கைளில் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் ஒன்றுகூடலாம்.

வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கைக்கும் வரம்பு கிடையாது.

எல்லா ஊழியர்களும் வேலை இடங்களுக்குத் திரும்பலாம்.

வேலையிடங்களில் பிறருடன் தொடர்புகொள்ளாதபோது முகக்கவசம் அணியத் தேவையில்லை.

1,000 பேருக்கும் அதிகமானோர் இடம்பெறக்கூடிய பெரிய நிகழ்ச்சிகளில் இனி வரம்பின்றி பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ளலாம்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் இனி பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் கொவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளத் தேவையில்லை.

பெரும்பாலான இடங்களில் ‘டிரேஸ்டுகெதர்’ கருவியைக் கொண்டு ‘சேஃப்என்ட்ரி’ பதிவுசெய்யத் தேவையில்லை.

திருமணங்கள், கலந்துரையாடல்கள், மாநாடுகள் போன்ற 500க்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கான மாறுபட்ட விதிமுறைகள் விலக்கப்பட்டுள்ளன.

இனி வார நாள்களில் அதிகபட்சமாக 25,000 வெளிநாட்டு ஊழியர்கள் சமூகத்திற்குள் வரலாம்.

வார இறுதி நாள்களிலும் பொது விடுமுறை நாள்களிலும் இந்த எண்ணிக்கை 50,000க்கு உயர்த்தப்பட்டுள்ளது.

“கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் என்னால் என் நண்பர்களை இனி ஒன்றாக சந்தித்து பேசமுடியும். முன்பெல்லாம் ஐந்து பேர், 10 பேர் என்ற கட்டுப்பாடு இருந்ததால் அனைவரும் ஒன்றாக சந்தித்து பேசி மகிழ முடியவில்லை. இப்போது நான் அனைவரையும் பார்த்து மகிழலாம்,” என்று சென்ற ஆண்டு தொடக்கக் கல்லூரி படிப்பை முடித்த 18 வயது அக்ஷயா அய்யாகண்ணு தமிழ் முரசிடம் கூறினார்.

“நாம் இந்தத் தளர்வுகளை மனமுவந்து வரவேற்கிறோம். இருந்தாலும் பாதுகாப்புடனும் விழிப்புடனும் இருத்தல் அவசியம். ஒன்றுபட்டு இணைந்து பாதுகாப்பான சமூகத்தைப் பேணுவோம்,” என்று ஆசிரியர் கலைவாணி இளங்கோ.

#கொரோனா #கொவிட்-19 #சிங்கப்பூர்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!