வேலூர் தேர்தல் ரத்தாகவில்லை

தமிழகத்தின் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதற்கான உத்தரவை வெளியிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய இந்தியத் தேர்தல் ஆணையம், அந்தத் தொகுதியில் தேர்தல் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்ட சர்ச்சையினால் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று இந்திய ஊடகங்கள் கூறியதற்குப் பதிலளிக்கும் வகையில் ஆணையம் அவ்வாறு தெரிவித்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) வேட்பாளர் கதிர் ஆனந்தின் அலுவலகத்திலிருந்து போலிசார் ரொக்கப்பணத்தைப் பறிமுதல் செய்ததை அடுத்து தேர்தல் நிறுத்தப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்தன. 

தனது தேர்தல் உறுதிமொழி ஆவணத்திலும் நியமனப் பத்திரங்களிலும் தவறான தகவல்களைக் குறிப்பிட்டதன்பேரில் ஆனந்த் குற்றம் சாட்டப்பட்டார். அந்தக் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

திமுகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான துரைமுருகனின் மகன்தான் இந்த ஆனந்த்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலின் முடிவுகள் மே 23ஆம் தேதி அறிவிக்கப்படும். இந்தத் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திமுகவை எதிர்த்துப் போட்டியிடும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்