ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தார் ஜெகன்மோகன் ரெட்டி; சந்திரபாபு நாயுடு கட்சி படுதோல்வி

ஜெகன்மோகன் ரெட்டி தலைமை யிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

மொத்தமுள்ள 175 தொகுதி களில் 88 தொகுதிகளை வென் றாலே பெரும்பான்மை பெற்றுவிட லாம் என்ற நிலையில் ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 149 தொகுதிகளில் முன்னிலை யில் இருந்து வருகிறது.

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 25 தொகு திகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. தோல்வியை ஒப்புக் கொண்டு சந்திரபாபு நாயுடு, ஆளு நரிடம் பதவி விலகல் கடிதத்தை நேற்று அளித்தார்.

முதன்முறையாக ஆந்திராவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டமன்ற உறுப் பினர்கள் நாளை கூடி, ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராகத் தேர்வு செய்யவுள்ளனர். இம்மாதம் 30ஆம் தேதி பதவியேற்பு விழா இடம்பெறக்கூடும்.

முன்னதாக, தெலுங்கு தேசம் கட்சியே இம்முறையும் வென்று ஆட்சியைத் தக்கவைக்கும் என இரு கருத்துக்கணிப்புகள் முன்னு ரைத்திருந்தன. அதே நேரத்தில், இந்தியா டுடே-ஆக்சிஸ் கருத்துக் கணிப்பும் சில உள்ளூர் செய்தி நிறுவனங்கள் இணைந்து மேற் கொண்ட கருத்துக்கணிப்பும் ஒய் எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியே வெல் லும் எனக் கூறியிருந்தன.

அதேபோல, மாநிலத்தின் 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் 22ல் ஜெகன்மோகனின் கட்சி முன்னிலையில் இருந்தது.

பாஜக தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் வெளியேறியதும் ஜெகன்மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும் 14 மாதகாலம் மேற் கொண்ட நடைப்பயணமுமே சந்திர பாபு நாயுடுவின் வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

பாஜக கூட்டணியில் இடம் பெற்றபோது ஆந்திர மாநிலத் திற்குச் சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவதாக சந்திரபாபு நாயுடு உறுதியளித்திருந்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்காததால் அவர் பாஜக கூட்டணியைவிட்டு கடந்த ஆண்டு வெளியேறினார். அத்துடன், இந்தத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒன்றுதிரட்டும் பணி யையும் அவரே முன்னின்று செய்து வந்தார்.

சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தோற்றுப்போய் விட்டதாகப் பிரசாரத்தின்போது கடுமையாகச் சாடினார் ஜெகன் மோகன். அதோடு, ஆந்திராவிற்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் கட்சியுடன்தான் கூட்டணி அமைப் போம் என்றும் அவர் உறுதியளித் தார்.

கடந்த 2014 நடந்த சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 103 தொகுதிகளை வென்று பெரும்பான்மை பெற்றது. ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி 66 இடங் களிலும் பாரதிய ஜனதா கட்சி நான்கு இடங்களிலும் வென்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!