இளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’

வி. அருள் ஓஸ்வின்

மணிக்கணக்காக திறன்பேசிகளை யும் மடிக்கணினிகளையும் பயன் படுத்தும் மாணவர்களின் வழியிலேயே  அவர்களிடம், தமிழ் மொழிப் புழக்கத்தையும் சமூக சிந் தனையையும் ஊக்குவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் ‘இளமை 2.0’ குழுவினர்.  
மாணவர்களை நடிக்க வைத்து அந்தக் காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய் வது ‘இளமை 2.0 இளையர்களின் பாணி. முதல் கட்ட முயற்சியில் இவர்கள் ‌ஷிஃபா, முன்னாள் பேலஸ்டியர் ஹில் தொடக்கப்பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தினர்.  சுமார் 30 தொடக்கநிலை மாணவர் கள் இத்திட்டத்தின் மூலம் தமிழில் தங்கள் பேச்சாற்றலையும் நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தினர். இந்தப் படைப்புகள் ‘இளமை’ எனும் ‘ஃபேஸ்புக்’ சமூக வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டது. 
கல்வி அமைச்சு, தேசிய நூலக வாரியம் ஆகிய பங்காளிகளுடன் இணைந்து ‘இளமை 2.0’ குழு இலக்கியத்திலிருந்து சமூக விவ காரங்கள் வரையிலான மின் னிலக்க படைப்புகளை சிங்கப்பூர் இந்திய சமூகத்தினர், பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பு கிறது. 
அடுத்த கட்டமாக குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த இளையர்களின் திறமை களை வளர்த்து அவற்றை வெளிக் கொணர ‘நண்பன்டா’ எனும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது ‘இளமை 2.0’ குழு. 
‘பியான்ட் சோ‌ஷியல் சர்விசஸ்’ எனும் சமூக அமைப்புடன் இணைந்து இக்குழு செயல்பட உள்ளது.  சமூக மேம்பாட்டிலும் மின்னிலக்க காணொளிகளைத் தயாரிப்பதிலும் ஆர்வம் கொண் டுள்ளோர் ‘இளமை 2.0’ குழுவில் சேரலாம்.  மேல் விவரங்களுக்கு ilamaiteam@gmail.com எனும் முகவரியில் மின் அஞ்சல் வழி தொடர்புகொள்ளலாம்.
இக்காணொளிகள் விரைவில் தமிழ் முரசு இணையத் தளத்திலும் வலம் வரும்.