இன்றைய பலன்:
கூடுமானவரை எந்தப் பணியையும் ஒத்திப்போட வேண்டாம். இன்று தொடங்கிய வேகத்தில் பணிகள் மளமளவென நடந்தேறும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
நிறம்: அரக்கு, பச்சை
வாரப் பலன்:
அன்புள்ள மேஷ ராசிக்காரர்களே,
நிழல் கிரகமான ராகு சிறப்பான இடத்தில் அமர்ந்துள்ளார். சுக்கிரனால் நலமுண்டு. சனி, கேது, புதன், சூரியன், சந்திரனால் நலமில்லை. செவ்வாயின் இடமாற்றம் சாதகமாகாது. குருவால் நன்மை, தொல்லை இல்லை.
எதிலும் நிதானமான, கச்சிதமான முடிவுகளை எடுக்கக்கூடியவர் என உங்களைக் குறிப்பிடலாம். இவ்வாரம் இரட்டிப்புக் கவனம் தேவை. தற்போது வேலைப்பளு அதிகரிக்கும். மறுபக்கம் தடைகளும் இருக்கும். கூடுதல் உழைப்பு, தகுந்த செயல்திட்டங்கள் இன்றி வெற்றியை ருசிக்க இயலாது. தேடி வரும் ஆலோசனைகளை ஏற்கலாம் என்றாலும் பிறரை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். வருமான நிலை சுமார் எனலாம். வழக்கமான வரவுகளைக் கொண்டு வழக்கமான தேவைகள், செலவுகளை ஈடுகட்ட இயலும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கவனம் தேவை. மங்கல காரியங்கள், பயணங்கள், புது முயற்சிகள் தொடர்பில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உடல்நலம் ஒரே சீராக இருக்காது. உபாதைகளுக்கு ஏற்ப மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. பணியாளர்களும் வியாபாரிகளும் சலுகைகளை எதிர்பார்க்கமால் பணியாற்ற வேண்டியிருக்கும். வார இறுதியில் தடைகள் குறையும். பணிகள் வேகம காணும்.
வீட்டில் இயல்புநிலை இருக்கும். பெற்றோர் நல்ல அறிவுரைகளைக் கூறி வழிநடத்துவர்.
அனுகூலமான நாள்கள்: டிசம்பர் 4, 6
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7