இன்றைய பலன்:
சூழ்நிலைக்கு ஏற்ப செயல்திட்டங்களில் சிறு மாற்றங்களைச் செய்ய வேண்டி இருக்கும். இன்று தடைகள் உண்டு. எனினும் சமாளித்து விடுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
நிறம்: ஊதா, மஞ்சள்
வாரப் பலன்:
அன்புள்ள துலா ராசிக்காரர்களே,
இவ்வாரம் செவ்வாயின் அமைப்பு சிறப்பாக உள்ளது. குரு, சனி, கேது, சந்திரன், புதன், சூரியன் ஆகியோர் மேன்மையான பலன்களைத் தருவர். ராகு, சுக்கிரனால் நலமில்லை.
தாமாகத் தேடிச் சென்று பிறரது பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உதவுபவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். அடுத்து வரும் நாள்களில் உங்களது தனிப்பட்ட திறமைகள் பளிச்சிடும். ‘என்னால் எதையும் சாதிக்க முடியும்’ எனும் தன்னம்பிக்கை அதிரிக்கும். இவ்வாரம் நீங்கள் ஈடுபடும் பணிகளில் பெரும்பாலானவை எளிதில் முடிந்துவிடும். முன்பு அரைகுறையாக விட்டிருந்த வேலைகளை இப்போது தூசுதட்டி மீண்டும் முயற்சி செய்யலாம். உடல்நலம் நன்றாக இருக்கும். எனினும் ரத்த அழுத்தம், இனிப்பு நீர் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் சற்றே கவனமாக இருப்பது நல்லது. தற்போது வரவுகளில் சிக்கல் இருக்காது. செலவுகள்தான் கட்டுக்கடங்காது. மங்கலப் பேச்சுகள் சூடு பிடிக்கும். சொத்துகள் தொடர்பிலான சிக்கலில் நல்ல தீர்வை எதிர்பார்க்கலாம். பணியாளர்களின் கடந்த கால உழைப்புக்குரிய அங்கீகாரம் இப்போது கிடைப்பது உற்சாகம் அளித்திடும். வியாபாரிகள் புதிய கூட்டாளிகளுடன் இணைந்து எதையும் செய்ய வேண்டாம். வார இறுதியில் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இச்சமயம் பண விவகாரங்களில் கவனம் தேவை.
குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
அனுகூலமான நாள்கள்: ஜூன் 23, 24
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9