இன்றைய பலன்:
முக்கியமற்ற விவகாரங்கள் குறித்து கவலை வேண்டாம். இன்று நல்லவர்கள் துணை நிற்பர். ஆதாயங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
நிறம்: நீலம், வெண்மை
வாரப் பலன்:
அன்புள்ள ரிஷப ராசிக்காரர்களே,
இவ்வாரம் நிகழும் சுக்கிரனின் இடமாற்றம் சிறப்பானது. சனி, புதன், சூரியன் நற்பலன்களைத் தருவர். குரு, ராகு, கேது, செவ்வாய், சந்திரனின் மங்கலத்தன்மை கெடும்.
பெரியவர்களையும் நல்லவர்களையும் அரவணைத்துச் செல்பவர்கள் நீங்கள். அடுத்து வரும் நாட்களில் உங்களுக்குரிய வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தார், உங்களது தனிப்பட்ட தேவைகள் எளிதில் நிறைவேறும். மறுபக்கம் தவிர்க்க முடியாத வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல்நலம் திருப்தி தரும். உற்சாகமான மனநிலையில் வேகமாகச் செயல்படுவீர்கள். ஈடுபடும் காரியங்களில் நீங்கள் தீட்டும் செயல்திட்டங்கள் கச்சிதமாக அமையும். சிறு தடைகளை எளிதில் சமாளித்திடுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது புதியவர்களை இணைத்துக் கொள்ள வேண்டாம். நிச்சயிக்கப்பட்ட மங்கள காரியங்கள் நல்லபடியாக நடந்தேறும். பணியாளர்களும் வியாபாரிகளும் அனுகூலமடைவர். வார இறுதியில் சந்திக்கும் புதியவர்களுடன் அளவோடு பேசிப் பழகுங்கள்.
குடும்பத்தில் அமைதி நிலவும். பெற்றோர் ஆதரவுண்டு.
அனுகூலமான நாள்கள்: நவம்பர் 3, 5
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5