இன்றைய பலன்:
அவரச கதியில் செயல்பட்டால் வீண் கஷ்ட நஷ்டங்களைச் சந்திக்க நேரிடும். இன்று சில்லரை விவகாரங்களை நல்லவிதமாகப் பேசி தீர்த்துக்கொள்ளப் பாருங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
வாரப் பலன்:
அன்புள்ள கன்னி ராசிக்காரர்களே,
குரு பகவான் அதிசார அமைப்பில் சஞ்சரித்து சிற்சில நற்பலன்களைத் தருவார். சந்திரன், புதன், சூரியன், சுக்கிரன், ராகு சிறப்பான பலன்களைத் தருவர். சனி, கேது, செவ்வாயின் ஆதரவு இல்லை.
அனைத்திலும் தனி முத்திரை பதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள். இவ்வாரம் நீங்கள் ஈடுபடும் காரியங்கள் அனைத்தும் வெற்றிப்பாதையில் நகரும். சிறு தடைகளைத் தூசு போல் ஊதித் தள்ளுவீர்கள். பிறரால் செய்ய முடியாத பணிகளையும் நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆதாயங்கள் மட்டுமின்றி பாராட்டுகளும் தேடி வரும். புது முயற்சிகளில் ஈடுபட இது உகந்த நேரம்தான். உடல்நலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கே இடமில்லை. வழக்கமான உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வரவுகளைப் பொறுத்தவரையில் நன்றாக இருக்கும். வாழ்க்கை வசதிகள் உயரும். முன்பு தடைபட்ட மங்கல காரியப் பேச்சுகள் இப்போது சூடுபிடிக்கும். நண்பர்கள் நல்லுறவு பாராட்டுவர். இச்சமயம் நெருக்கமானவர் என்றாலும் பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. பணியாளர்களின் செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். வியாபாரம் சக்கைப் போடு போடும். சுயதொழில் புரிவோர்க்கு எதிர்பார்த்த இடத்தில் ஆதரவும் உதவியும் கிடைத்திடும். வார இறுதியில் மறைமுக எதிரிகளின் ஆதிக்கம் முளைக்கக்கூடும். இச்சமயம் கவனம் தேவை.
குடும்பத்தில் சிறு குறையும் இருக்காது. உடன்பிறந்தோர் ஆதரவுண்டு.
அனுகூலமான நாள்கள்: டிசம்பர் 15, 17
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6