இன்றைய பலன்:
நண்பர்கள் துணையோடு சிலவற்றை உருப்படியாகச் செய்து முடிக்க இயலும். இன்று வழக்கத்தைவிட அதிக பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
நிறம்: சிவப்பு, பச்சை
வாரப் பலன்:
அன்புள்ள மீன ராசிக்காரர்களே,
நிழல் கிரகமான கேதுவின் அமைப்பு சிறப்பானது. சுக்கிரன், புதன், சந்திரனின் அருள்கிட்டும். அதிசார குரு அளவோடு நலம்புரிவார். சனி, ராகு, சூரியன் , செவ்வாயால் நலமில்லை.
உங்கள் மீது பழி போடவும் உங்களைக் குறை கூறவும் சில தரப்பினர் காத்திருப்பார்கள். அத்தகையவர்களை இனம் கண்டு ஒதுங்கி நிற்கப் பாருங்கள். முக்கியப் பொறுப்புகளைத் தனித்து நிறைவேற்றுவது நல்லது. தனித்திறமைகள், நெருக்கமானவர்களின் உதவிகள் கைகொடுக்கும். முக்கிய பணிகளை முடித்து நிம்மதி காண்பீர்கள் என நம்பலாம். வரவுகள் ஓரளவு திருப்தி கரமாக இருக்கும். அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். நட்பு மற்றும் உறவு வட்டாரங்களுடன் அளவோடு பேசிப் பழகுவது நல்லது. யாருக்கும் பிணைக் கையெழுத்து போடவேண்டாம். பணியாளர்களும் தொழில் முனைவோரும் சிறு சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். வார இறுதியில் நம்பிக்கையூட்டும் தகவல்கள் பெறுவீர்கள். இச்சமயம் மனதில் தெளிவும் தைரியமும் அதிகரிக்கும்.
குடும்ப நலன் தொடர்பிலான முயற்சிகள் வேகம் காணும்.
அனுகூலமான நாள்கள்: நவம்பர் 2, 4
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9