இன்றைய பலன்:
தேவை இல்லாமல் யாருடனும் மோதத் தேவையில்லை. இன்று தடைகளை மீறி முக்கியப் பணிகளை முடிப்பீர்கள். ஆதாயங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
வாரப் பலன்:
அன்புள்ள மகர ராசிக்காரர்களே,
மாதக் கோள்களான புதன், சுக்கிரனின் அருள்கிட்டும். சனிபலம் தனிபலம் தரும். சூரியன், செவ்வாய், சந்திரன், ராகு, கேதுவின் பலம்கெடும். குருவால் நன்மை, தொல்லை இல்லை.
தோல்விகளையே வெற்றிப்படிகளாக்கும் புத்திசாலிகள் நீங்கள். அடுத்து வரும் நாள்களில் உங்களது பொருளியல் நிலை சிறப்பாக இருக்கும். வழக்கமான தொகைகள் தடையின்றிக் கிடைப்பது உற்சாகம் தரும். ஒருசிலர் உங்களிடம் பொருளுதவி எதிர்பார்க்கக்கூடும். ஆற்றில் போட்டாலும் அளந்துபோட வேண்டும் என்பதை மனதிற்கொண்டு செயல்படுங்கள். இவ்வாரம் நீங்கள் ஈடுபடும் பணிகள் அதிக சிரமமின்றி முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம் என்றாலும் புதியவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். சொத்துகள் தொடர்பில் வீட்டுப் பெரியவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள். எது எப்படியோ உடல்நலனில் மட்டும் சிறு குறையும் இருக்காது. குடும்பத்தாரும் நலமாகவே இருப்பர். பணியாளர்கள் வெற்றிநடை போடுவர். சுயதொழில் புரிவோர்க்கு உரிய உதவிகள் கிடைத்திடும். வார இறுதியில் உங்கள் மனம் மகிழும்படியான முக்கியத் தகவல் தேடி வரக்கூடும்.
குடும்பத்தில் உற்சாகம் நிறைந்திருக்கும். பிள்ளைகள் ஏற்றம் காண்பர்.
அனுகூலமான நாள்கள்: ஜனவரி 18, 20
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6