ராசிபலன்

leo

சிம்மம்

இன்றைய பலன்:

கடினம் எனக் கருதிய பணிகளும்கூட எளிதில் நடந்தேறும். இன்று எந்த பணியையும் புறக்கணிக்கக் கூடாது. மாலையில் ஓய்வு உண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7

நிறம்: பச்சை, அரக்கு

வாரப் பலன்:

அன்­புள்ள சிம்ம ராசிக்­கா­ரர்­களே,

செவ்வாய் சிறப்பான இடத்தில் சஞ்சரிக்கிறார். சுக்கிரனின் இடப்பெயர்ச்சி சாதகமாக அமையும். புதனால் நலமுண்டு. குரு, சனி, ராகு, கேது, சூரியன், சந்திரனின் ஆதரவு இல்லை.

நண்பர்களுக்காக எதையும் விட்டுக்கொடுப்பவர்கள் நீங்கள். தற்போது கோள்களின் அமைப்பால் உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துவிடாது. இவ்வாரம் வழக்கமான பணிகள் காத்திருக்கும். நீங்களும் அவற்றை வழக்கம்போல் செய்து முடிக்க முற்படுவீர்கள். எனினும் திடீர் தடைகளும் எதிரிகளின் ஆதிக்கமும் அவ்வளவு எளிதில் வெற்றியைத் தந்துவிடப்போவதில்லை. கடும் உழைப்பும் நல்ல திட்டங்களும் இல்லாமல் சாதிக்க இயலாது. வருமானம் அதிகரிக்காது. செலவுகள் குறையும். உடல்நலம் குறித்த கவலை வேண்டாம். எனினும் தேவையற்ற பயணங்கள், அலைச்சல் மிகுந்த பணிகள், ஆதாயமில்லா சந்திப்புகளைத் தவிர்க்கப் பாருங்கள். நட்பு, உறவு வட்டாரங்களுடனான தொடர்புகள் சுமூகமாக இருக்கும். பணியாளர்களும் வியாபாரிகளும் இரட்டிப்புக் கவனத்துடன் செயல்பட வேண்டும். வார இறுதியில் மங்கலப் பேச்சுகள், சொத்துகள் தொடர்பான முயற்சிகள் முன்னேற்றம் காணும்.

வீட்டில் இயல்புநிலை இருக்கும்.

அனுகூலமான நாள்கள்: செப்டம்பர் 3, 5

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9