இன்றைய பலன்:
கூடுமானவரை எந்தப் பணியையும் ஒத்திப்போட வேண்டாம். இன்று தொடங்கிய வேகத்தில் பணிகள் மளமளவென நடந்தேறும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
நிறம்: அரக்கு, பச்சை
வாரப் பலன்:
அன்புள்ள மேஷ ராசிக்காரர்களே,
நிழல் கிரகமான ராகுவின் அமைப்பு சிறப்பாக உள்ளது. அதிசார குரு வகையில் சிறு நன்மைகள் உண்டு. சந்திரன், சுக்கிரன் அருள்புரிவர். சனி, கேது, புதன், செவ்வாய் தொல்லை தருவர். சூரியனின் இடமாற்றம் சாதகமற்றது.
ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை நிறைவேற்றும் வரை ஓயாமல் உழைக்கக்கூடியவர்கள் நீங்கள். இவ்வாரம் உங்களது உடல்நலம் நன்றாக இருக்கும். சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். தற்போது பணிச்சுமை அதிகரிக்கும். ஓய்வு குறித்து யோசிக்காமல் ஓடியாடி உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். நண்பர்களின் உதவியுடன் பொறுப்புகளை எப்பாடு பட்டாவது நிறைவேற்றிடுவீர்கள். உழைப்புக்குரிய ஆதாயங்களில் சில உடனுக்குடன் கிடைக்கும் எனில், சில தள்ளிப் போகும். வருமான நிலை ஓரளவு மனநிறைவு தருவதாக அமையும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது முக்கியம். பணியாளர்கள் சக ஊழியர்களை அனுசரித்து நடப்பது முக்கியம். வியாபாரிகள் சூழ்நிலைக்கு ஏற்ப கவனமாகச் செயல்படுவது நல்லது. வார இறுதியில் மேற்கொள்ளும் பயணம் இனிய அனுபவங்களைத் தரும் என்பதுடன் ஆதாயங்களையும் தரும்.
வீட்டில் இயல்புநிலை இருக்கும். பெற்றோர் ஆதரவு பலம்சேர்க்கும்.
அனுகூலமான நாள்கள்: அக்டோபர் 15, 16
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7